முகப்பு Special Story வாச‌ன் கண் மருத்துவமனையில் அதிநவீன கான்டூரா லேசர் சிகிச்சை பிரிவு தொடக்கம்

வாச‌ன் கண் மருத்துவமனையில் அதிநவீன கான்டூரா லேசர் சிகிச்சை பிரிவு தொடக்கம்

0

பெங்களூரு, டிச. 17: வாச‌ன் கண் மருத்துவமனையில் அதிதவீன கான்டூரா லேசர் சிகிச்சை பிரிவு தொடக்க விழாவில் சந்திராயன் நாயகன் பத்மஸ்ரீ டாக்டர் மயில்சாமி அண்ணாத்துரை பங்கேற்றார்.

ராஜாஜி நகரில் உள்ள வாச‌ன் கண் மருத்துவமனையில் அதிநவீன கான்டூரா லேசர் சிகிச்சை பிரிவு சிறப்பாக செயல்பட உள்ளது. கான்டூரா லேசர் சிகிச்சைப்பிரிவை சந்திராயன் நாயகன் பத்மஸ்ரீ டாக்டர் மயில்சாமி அண்ணாத்துரை அவர்களுடைய திருக்கரங்களால் ஞாயிற்றுக்கிழமை (டிச.17) திறந்துவைக்கப்பட்டது.

இன்றைய விஞ்ஞான காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை பயன்படுத்தக் கூடிய முக்கியமான சாதனங்களான செல்போன், கம்ப்யூட்டர், டெலிவிஷன் போன்ற தகவல் தொடர்பு சாதனங்களை ஒவ்வொருவரும் காண வேண்டிய அவசியத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மாணவ மாணவியரும் ஆன்லைன் வகுப்புகளுக்கு செல்போன்கள் தொடர்ந்து பயன்படுத்துவதாலும், பார்த்து வருவதாலும் கண் பார்வையில் குறைபாடு ஏற்பட்டு கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது

கண்களும் ஒரு கேமராவை போன்ற சாதனம் தான். நாம் பார்க்கும் பொருட்களின் வடிவமும் உருவமும் கண்ணில் உள்ள கருவிழி வழியாக விழித்திரையில் துல்லியமாக குவிந்தால் அது சரியான பார்வையாகும்

விழித்திரையில் சரியாகக் குவியாமல் விழித்திரைக்கு சற்று முன்புறமாக குவிந்தால் பார்வை குறைபாடு ஏற்படும் இதனை கிட்டப்பார்வை என்றும் விழித்திருக்கு பின்புறமாக குவிந்தாலும் பார்வை குறைபாடு ஏற்படும் இதனை தூரப்பார்வை என்றும் கூறப்படுகிறது.

கிட்டப்பார்வை, தூரப்பார்வை குறைபாடு உள்ளவர்கள் கண்ணாடி அணிய வேண்டியது. அவசியமாகும். கண்ணாடி இல்லை என்றால் காண்டாக்ட் லென்ஸ் அணியலாம். காண்டாக்ட் லென்ஸ் அனைவருக்கும் பொருத்தமானதாக இருப்பதில்லை பைக் போன்ற வாகனங்களில் செல்பவர்கள் விளையாட்டு ஈடுபாடு உள்ளவர்களுக்குகாண்டாக்ட் அணிவது மிகவும் சிரமமாக இருக்கிறது. திருமணம் ஆக உள்ள இளம் பெண்கள்

பெரும்பாலும் கண்ணாடி அணிவதை விரும்புவதில்லை கண்ணாடி அணிந்தால் சற்று வயது முதிர்ந்தவராக தெரியும் என்பதாகவும் முக அழகை குறைக்கும் என்பதாகவும் அவர்களுக்கு அச்சம் ஏற்படுகிறது இந்த அச்சத்தை போக்க வந்த தீர்வுதான் லேசர் சிகிச்சை முறைகள் முன்னர் லேசிக் மற்றும் ஸ்மைல் லேசர் இருந்தன அவற்றை விட பன்படங்கு திறனுடைய அதிநவீன லேசர் சிகிச்சை தான் கான்டூரா விஷன் சிகிச்சை முறை.

கான்டூரா விஷன் சிகிச்சை என்பது அதிக திறன் கொண்ட ஒரு லேசர் சிகிச்சை முறையாகும் மற்ற லேசர் சிகிச்சை முறையில் 2000 திறன் வரை லேசர் செலுத்தப்படுகிறது எனில் கான்ட்ரோ விஷனில் 22,000 திறன் லேசர் செலுத்தப்படுவதே சிறப்பம்சமாகும். இதனால் கான்டூராவில் மிகத்துல்லியமான பார்வை கிடைக்கின்றது ஒருவருக்கு 6/6 இருந்தால் சரியான பார்வையாக கருதப்படுகிறது. கான்டூராவில் 6/5 விஷன் வரை கிடைக்கிறது என்பதால் பார்வைக் குறைபாட்டைசரி செய்யும் முறைதான் கான்டூரா விஷன் சிகிச்சை முறை.

20 வயது முதல் 40 வயது உடைய அனைவரும் தகுதியானவர்களே. கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை குறைபாடு உள்ளவர்கள் இதில் பார்வைத்திறன் குறைபாடு 12 வரை உள்ளவர்களும் சிகிச்சை பெற தகுதியானவர்கள். பின்பு ஸ்கேன் பரிசோதனை மூலம் டாக்டர்களால் சிகிச்சை உறுதிபடுத்தப்படும்

இவ்வசதியினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு இந்நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்த வாச‌ன் கண் மருத்துவமனை இயக்குனர் ஆ.சுந்தரமுருகேசன் அவர்கள் தெரிவித்தார்.

முந்தைய கட்டுரைதிருவள்ளுவரை வைரல் ஆக்குவது நமது உடைமை மற்றும் கடமை: எழுத்தாளர் மமதி சாரி
அடுத்த கட்டுரைஆஸ்டர் சிஎம்ஐ மருத்துவமனையின் இதய செயலிழப்பு கிளினிக் மற்றும் டேகேர் மையம் அறிமுகம்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்