முகப்பு Food ரூஃப் டாப் பப் மற்றும் கிச்சன் உம்பா திறப்பு

ரூஃப் டாப் பப் மற்றும் கிச்சன் உம்பா திறப்பு

0

பெங்களூரு, ஜூலை 29: பெங்களூரு ஒயிட்பீல்டில் ரூஃப் டாப் பப் மற்றும் கிச்சன் உம்பா திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உம்பா என்றால் திருவிழா அல்லது கூட்டம் என்று பொருள். இது ஹோட்டல் ஃபாக்ஸ்க்ளோவ் இன்டர்நேஷனலின் 5வது மாடியில் அமைந்துள்ளது. இதில் உலகத் தரம் வாய்ந்த பல்வகை உணவு வகைகளையும் கண்கவர் நகரக் காட்சிகளையும் வழங்கப்படுகிறது.

வளமான பழங்குடியினரின் கருப்பொருளை முன்னிலைப்படுத்துவதற்காக, சுற்றுப்புறம் மற்றும் வளிமண்டலம் மிகவும் கலைநயமிக்க முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வேலைக்குப் பிறகு நண்பர்களுடன் சரியான குடும்ப இரவு உணவை சாப்பிடுவதற்கு இது சிறந்த இடமாக இது உள்ளது.

குறிப்பாக கர்நாடக மாநிலம் குந்தாப்பூரின் பாரம்பரிய உணவு வகைகள் ஹோட்டலில் இடம்பெற்றுள்ளன. பெங்களூரின் தகவல் தொழில்நுட்பத்தின் முக்கிய இடமாக விளங்கும் ஒயிட் பீல்டு விளங்குகிறது. எனவே இங்கு பணிபுரியும் இளைஞர்கள் உள்ளிட்டோர் இங்கு அதிக அளவில் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சைனீஸ் உள்ளிட்ட உணவுகள் சிறந்த சமையலர்கள் மூலம் சமைக்கப்பட்டு பரிமாறப்படுகிறது. ஹோட்டலில் குடும்பத்துடன் வருபவர்கள் அமர்ந்து உணவு உண்பதற்கான தனிப்பிரிவும் ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது.

திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகை சஞ்சனா கல்ராணி செய்தியாளர்களிடம் கூறியது, மாநில அளவில் சிறந்த உணவுகள் கிடைக்கும் நகரங்களில் மங்களூரு, குந்தாப்புரா, உடுப்பி உள்ளிட்டவை முக்கிய இடம் வகிக்கிறது. அந்த உணவுகளை உண்பதற்காக நான் அந்த நகரங்களுக்கு செல்வது வாடிக்கை.

தற்போது அந்த உணவுகள் உம்பாவில் கிடைப்பதால், எனக்கு அங்கு செலவு மிச்சமாகி உள்ளது. இங்கு சமைக்கப்பட்ட உணவுகள் சிறப்பாக உள்ளதை என்னால் நிச்சயமாக கூறமுடியும். இனி இங்கு எனது மகனுடன் வந்து இந்த உணவுகளை ருசிப்பேன் என்றார்.

முந்தைய கட்டுரைசெல்லப்பிராணிகளின் முழுமையான வளர்ப்பை ஊக்குவிக்கும் ஒரு இலவச நிகழ்வு
அடுத்த கட்டுரைஆகஸ்ட் 10 முதல் 12 வரை பெங்களூரு முத்தனஹள்ளியில் இந்தியா ஸ்டார்ட்அப் திருவிழா

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்