முகப்பு Politics ராகுல்காந்தியை சகோதரர் போல மு.க.ஸ்டாலின் நேசிக்கிறார்: அமைச்சர் தினேஷ்குண்டுராவ்

ராகுல்காந்தியை சகோதரர் போல மு.க.ஸ்டாலின் நேசிக்கிறார்: அமைச்சர் தினேஷ்குண்டுராவ்

0

பெங்களூரு, ஆக. 6: ராகுல்காந்தியை சகோதரர் போல மு.க.ஸ்டாலின் நேசிக்கிறார் என்று மாநில குடும்ப நல சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ்குண்டுராவ் தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமச்சந்திரபுரத்தில் உள்ள கலைஞர் மாளிகை மு.க.ஸ்டாலின் நடைபெற்ற‌ கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்ச்சியாக‌ மாநிலத் திமுக கலைஞரகத்தில் புதிய பெயர் பலகையை கர்நாடக மாநில குடும்ப நல சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

பின்னர் அவருக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது. கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தினேஷ் குண்டு ராவ் பெங்களூரு காந்திநகர் தொகுதியில் தொடர்ந்து 6 வது முறையாக‌ வெற்றி பெற்றதையடுத்து அவருக்கு கர்நாடக மாநில திமுக சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பின்னர் தினேஷ்குண்டுராவ் பேசியது: தேசிய அளவில் ராகுல்காந்திக்கு பிறகு பாஜகவை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்க்கிறார். ராகுல்காந்தியை சகோதரர் போல மு.க.ஸ்டாலின் நேசிக்கிறார். ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று முதலில் அறிவித்தவர் மு.க.ஸ்டாலின் தான். தமிழ்நாட்டில் திமுகவும், காங்கிர்ஸ் கட்சியும் கூட்டணியில் உள்ளன.

கர்நாடகத்தில் இனி போராட்டம், கூட்டம் உள்ளிட்டவைகளில் திமுக பங்கேற்பதற்கான நடவடிக்கையை, காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் டி.கே.சிவகுமார், பெங்களூரின் தலைவர் சேகர் ஆகியோருடன் விவாதித்து மேற்கொள்ளப்படும். அதே போல, மாநகராட்சி தேர்தலில் திமுகவிற்கு வார்டு ஒதுக்குவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என்றார்.

முன்னதாக‌ கர்நாடக திமுக அலுவலக புதிய பெயர் பலகையை அவர் திறந்து வைத்தார். பின்னர் அங்குள்ள அண்ணா, கலைஞர் கருணாநிதி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விழாவில் பொதுக்குழு உறுப்பினர் முருகமணி செல்வம், முன்னாள் நிர்வாகி, கே.எஸ்.சுந்தரேசன், வி.எஸ்.மணி, ஏ.ராஜேந்திரன், கருணாநிதி, ஜெயபால், தலைவர் அம்மாயி ஜெயவேல், துணை அமைப்பாளர் மங்கம்மா, இளைஞர் அணி துணைத் அமைப்பாளர் ராஜசேகர், எம்.முருகானந்தம், முகமது ஹாரீப்,

சதீஷ், பிரபு, ஜி.குமார், எம்.ஆர்.பழம்நீ, இலக்கிய அணி முருகு தர்மலிங்கம், ஆற்காடு, அன்பழகன், உட்லண்ட்ஸ் கணேசன், எல்.முனியன், ஜி.நாகராஜ், காஞ்சி சிவசங்கர், ஆ.கரிகாலன், உத்தரகுமார், லோகநாதன், கன்னியப்பன், பெமல் கேசவன், இளங்கோ உள்ளிட்ட‌ ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்

முந்தைய கட்டுரைபெங்களூரு லுலு மாலில் புதிய பத்மாஷ் திறப்பு விழாவிற்கான முன்னோட்டம்: பாலிவுட் நடிகை மௌனி ராய் பங்கேற்பு
அடுத்த கட்டுரைஅகில பாரத பவசார க்ஷத்ரியர்களின் வளர்ச்சிக்கு மாநில அரசு உறுதுணையாக இருக்கும்: அமைச்சர் தினேஷ்குண்டுராவ்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்