முகப்பு Health மருத்துவச் சுற்றுலாவிற்கு தென் இந்தியா சிறந்து விளங்குகிறது: மத்திய இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்

மருத்துவச் சுற்றுலாவிற்கு தென் இந்தியா சிறந்து விளங்குகிறது: மத்திய இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்

0

பெங்களூரு, ஜன. 28: மருத்துவச் சுற்றுலாவிற்கு தேசிய அளவில் தென் இந்தியா சிறந்து விளங்குகிறது என்று மத்திய கல்வி மற்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் தெரிவித்தார்.

பெங்களூரில் சனிக்கிழமை இந்தியாவின் முதல் 100 சதவீத கார்பன் நியூட்ரல் மருத்துவமனையை ரூ.1,200 கோடி முதலீட்டில் அம்பிகா மருத்துவ அறக்கட்டளை மற்றும் ஆய்வு மையம், பெங்களூரில் உள்ள‌ லைஃப் லைன் ஹாஸ்பிடல்ஸ் குழுமத்துடன் இணைந்து நடத்த உள்ள பல்நோக்கு மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடியில் ஆட்சியில் நாடு சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் அமெரிக்க உள்ளிட்ட மேலை நாடுகளிலிருந்தும், இந்தியாவிற்கு மருத்துவ சுற்றுலா மேற்கொள்ள விரும்புகின்றனர். குறிப்பாக மருத்துவச் சுற்றுலாவில் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட தென் இந்தியா சிறந்து விளங்குகிறது. அம்பிகா மருத்துவ அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மையம், சென்னை லைஃப்லைன் ஹாஸ்பிடல்ஸ் குழுமத்துடன் இணைந்து ரூ. 1200 கோடி ரூபாய் முதலீட்டில் 500 படுக்கைகள் கொண்ட இந்தியாவின் முதல் 100 சதவீத கார்பன் நியூட்ரல் பல்நோக்கு மருத்துவமனை பெங்களூரு கல்யாண் நகரில் தொடங்க உள்ளது. இது வரவேற்கத்தக்கது. இது போன்ற சுகாதாரத்துறையில் முதலீடு செய்ய அனைவரும் முன் வர வேண்டும் என்றார்.

அம்பிகா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனர் பிரவீஷ் குழிப்பில்லி பேசியது: திட்டத்தின் முதல் கட்டத்தின் போது, ​​பெங்களூரு கல்யாண்நகரில் 500 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்துள்ளது. 100 சதவீத கார்பன் நியூட்ரல் மருத்துவமனை இந்தியாவில் முதல் முறையாகும். மேற்குறிப்பிட்ட திட்டத்தின் 2 ஆம் கட்டத்திற்காக கெங்கேரியில் ஏற்கனவே 50 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. “லைஃப்லைன் மருத்துவமனைகள் தென்னிந்தியாவில் ஒரு சிறந்த சுகாதார வழங்குநராக இருந்து வருகிறது. மேலும் இந்த திட்டத்தில் அவர்களுடன் இணைந்திருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.

எங்கள் நோக்கம் உலகத்தரம் வாய்ந்த ஒரு வசதியை அமைப்பதாகும், இது வேகமாக வளர்ந்து வரும் இந்த நகரம் முழுவதும் அனைவருக்கும் அணுகல் மற்றும் விரிவான கவனிப்பை வழங்கும் வகையில் வைக்கப்படும். சென்னை லைஃப்லைன் மருத்துவமனைகளின் தலைமை அறுவை சிகிச்சை நிபுணரும், மேலாண் இயக்குநருமான‌ மருத்துவர் ஜே.எஸ். ராஜ்குமார் கூறினார்.

முந்தைய கட்டுரைகர்நாடக திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்
அடுத்த கட்டுரைகல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மாநகர பேருந்துகளை பயன்படுத்த வேண்டும்: போக்குவரத்து சிறப்பு ஆணையர் எம்.ஏ.சலீம்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்