முகப்பு Bengaluru பொது வாழ்க்கையைப் பாதுகாக்கவும், அமைதியான சமுதாயத்தை உருவாக்கவும் சிசி கேமராவின் பங்களிப்பு அதிகம்

பொது வாழ்க்கையைப் பாதுகாக்கவும், அமைதியான சமுதாயத்தை உருவாக்கவும் சிசி கேமராவின் பங்களிப்பு அதிகம்

0

பெங்களூரு, ஜூன் 16: பொது வாழ்க்கையைப் பாதுகாக்கவும், அமைதியான சமுதாயத்தை உருவாக்கவும் சிசி கேமராவின் பங்களிப்பு அதிகம் என்று முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்தார்.

ராஜாஜிநகர் காவல் நிலையம் சி.சி. கேமரா கட்டுப்பாட்டு அறையை முன்னாள் கல்வித்துறை அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் மற்றும் போலீஸ் கமிஷனர் பி.தயானந்த், கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் சந்தீப் பாட்டீல், டிசிபி சிவபிரகாஷ் தேவராஜ், ஏசிபி மனோஜ் இன்ஸ்பெக்டர் ஆர்.பி.அசோக் ஆகியோர் திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய எஸ்.சுரேஷ்குமார், ராஜாஜிநகர் காவல் நிலையத்தில் 106 முக்கிய சாலைகளில் 281 புதிய தொழில்நுட்ப சிசி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பொது வாழ்க்கையைப் பாதுகாக்கவும், அமைதியான சமுதாயத்தை உருவாக்கவும் சிசி கேமராவின் பங்களிப்பு அதிகம்.

பீட் போலீஸாக சிசி கேமராக்கள் செயல்படுகின்றன‌. பசவேஷ்வர் நகர் காவல் நிலையத்தில் 250 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. விரைவில் சிசி கேமராக்களில் மைக் சேர்க்கப்படும். பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்க சிசி கேமராக்கள் உதவிகரமாக உள்ளன என்றார்.

மக்களின் பாதுகாப்பு மற்றும் சொத்து பாதுகாப்புக்காக சிசி கேமராக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நகர காவல் ஆணையர் பி.தயானந்த் தெரிவித்தார். போலீசார் இல்லாத நேரத்தில் சிசிகேமராக்கள் செயல்படும். குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தவும், சீரான வாகனப் போக்குவரத்தை கட்டுப்படுத்தவும் சிசி கேமராக்களை பயன்படுத்தலாம்.

பொதுமக்களின் பிரச்னைகள் குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இருப்பிட தகவல் மற்றும் வீடியோ பதிவேற்றம் செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் துணை மேயர் ரங்கண்ணா, முன்னாள் மாநகராட்சி உறுப்பினர் ராஜண்ணா, பாஜக தலைவர்கள் பி.என்.ஸ்ரீனிவாஸ், யஷஷ் நாயக், லட்சுமிநாராயண், சுதர்சன், அமித் ஜெயின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முந்தைய கட்டுரை5-ஆம் ஆண்டு யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) பயிற்சிக்கு விண்ணப்பிக்க‌ அழைப்பு
அடுத்த கட்டுரைரத்த புற்றுநோய் மற்றும் ஸ்டெம் செல் தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த டிகேஎம்எஸ்-பிஎம்எஸ்டி, பெங்களூரு பைக்கர்ஸுடன் கைகோர்ப்பு

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்