முகப்பு Politics பேரறிஞர் அண்ணாவின் மறைவு தமிழர்கள் மட்டுமின்றி திராவிடர்களுக்கு பேரிழப்பு: கர்நாடக‌ திமுக அமைப்பாளர் ந.இராமசாமி

பேரறிஞர் அண்ணாவின் மறைவு தமிழர்கள் மட்டுமின்றி திராவிடர்களுக்கு பேரிழப்பு: கர்நாடக‌ திமுக அமைப்பாளர் ந.இராமசாமி

0

பெங்களூரு, பிப். 3: பேரறிஞர் அண்ணாவின் மறைவு தமிழர்கள் மட்டுமின்றி திராவிடர்களுக்கு பேரிழப்பு என்று கர்நாடக‌ திமுக அமைப்பாளர் ந.இராமசாமி தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமச்சந்திரபுரத்தில் உள்ள கலைஞர் மாளிகையில் உள்ள தளபதி மு.க ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில் வெள்ளிக்கிழமை பேரறிஞர் அண்ணாவின் 54 வது நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில அமைப்பாளர் ந.இராமசாமி தலைமையில் நடந்த இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பேரறிஞர் அண்ணாவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் பங்கேற்று பேசிய, ந.இராமசாமி, பேரறிஞர் அண்ணாவின் புகழ் பற்றி ராமசாமி பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.

அண்ணா நீண்ட நாள் உயிருடன் இருந்தால், இந்திய அரசியல் சூழலே மாறி இருக்கும். தமிழின் பெருமையை உலகத்திற்கு காட்டியவர் அவர். அவர் பாராளுமன்றத்தில் பேசும்போது நேரு, வாஜ்பாய் உள்ளிட்டோர் அவர் பேச்சை ரசித்து, தங்களுக்கான நேரத்தை, அண்ணாவிற்கு ஒதுக்கி தந்தனர். திராவிடம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திவர். அவர் நீண்ட நாள் வாழாமல் போனது நமது துரதிஷ்டம். பேரறிஞர் அண்ணாவின் மறைவு தமிழர்கள் மட்டுமின்றி திராவிடர்களுக்கு பேரிழப்பாகும். அவர் மறைந்தாலும் அவரது புகழ் தமிழர்களின் உள்ளங்களில் இன்று நிலைத்து நிற்கிறது. என்றார்.

நிகழ்ச்சியில் அவைத்தலைவர் பெரியசாமி, பொருளாளர் கே.தட்சிணாமூர்த்தி, துணை அமைப்பாளர் ஜி.ராமலிங்கம், முருகு தர்மலிங்கம், மகளிர் அணித் தலைவர் அம்மாயி அம்மாள், செயலாளர் சற்குணா, முன்னாள் பொறுப்பாளர் ஏ.டி.ஆணந்த்ராஜ், தொமுச செயலாளர் திருமலை, கிளைக்கழகச் செயலாளர் செ.தமிழ்ச்செல்வன், ஆ.கரிகாலன், தாமோதரன், கிளைக்கழக துணைச் செயலாளர் எஸ்.ஏழுமலை, மகேஷ்பாபு, உட்லண்ஸ் கணேசன், ந.விக்ரமன், ஜியோ, குப்புசாமி, லோகநாதன், சத்தீஷ், எஸ்.ரகு, எம்.ஆர்.பழநீ, ஆற்காடு அன்பழகன், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் எம்.முருகானந்தம், மு.ராஜசேகர், ஜி.நாகராஜ் உட்பட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு பேரறிஞர் அண்ணாவின் திருவுருவட் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முந்தைய கட்டுரைஉலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, ஆஸ்டர் சிஎம்ஐ மருத்துவமனை சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம்
அடுத்த கட்டுரைபெங்களூரு இஸ்கான் நிறுவனத்தில் 49வது ஸ்ரீ நித்யானந்த ஜெயந்தோத்ஸவா விழா கோலாகலமாக கொண்டாட்டம்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்