முகப்பு Bengaluru பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் டிச. 25 இல் 8 நாள் தமிழ்ப் புத்தகத் திருவிழா 2022 தொடக்கம்

பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் டிச. 25 இல் 8 நாள் தமிழ்ப் புத்தகத் திருவிழா 2022 தொடக்கம்

0

பெங்களூரு, டிச. 22: பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் டிச. 25 இல் தொடங்கி, ஜன. 1 ஆம் தேதி வரை 8 நாள்கள் தமிழ்ப் புத்தகத் திருவிழா 2022 நடைபெறுகிறது. தொடக்க விழாவில் மக்களவை உறுப்பினர் பி.சி.மோகன், சிவாஜிநகர் சட்டப்பேரவை உறுப்பினர் ரிஸ்வான் அர்ஷத், ஒடிசா மாநில முதல்வரின் சிறப்பு ஆலோசகர் ஆர்.பாலகிருஷ்ணன், அறிவியல் அறிஞர் முனைவர் மயில்சாமி அண்ணாதுரை, பாபா அணு ஆராய்ச்சி கழகத்தின் முதுநிலை விஞ்ஞானி த.தவமணி, மாமன்ற மேனாள் உறுப்பினர் எஸ்.ஆனந்த்குமார் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

பெங்களூரு அல்சூரில் உள்ள தமிழ்ச்சங்கத்தில் கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம், கருநாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்ப் புத்தக திருவிழா, டிச. 25 ஆம் தேதி முதல் ஜன. 1 ஆம் தேதி வரை 8 நாள்கள் நடைபெற உள்ளது. புத்தக திருவிழாவில் சிறப்பு மலர் வெளியீடு, பள்ளி, கல்லூரி மாணவர்கள் 2 ஆயிரம் பேருக்கு ரூ. 2 லட்சம் மதிப்புள்ள நூல்கள் அன்பளிப்பு திட்ட தொடக்க விழா உள்ளிட்டவை நடைபெற உள்ளன.

புத்தக கண்காட்சியில் நாள்தோறும் மாலை 5 மணி முதல் இலக்கியமாலை, சிந்தனைக்களம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்நிகழ்ச்சிகளில் இஸ்ரோ மேனாள் தலைவர் சிவன், மேற்கு வங்க மேனாள் கூடுதல் தலைமைச் செயலாளர் கோ.பாலசந்திரன், கருநாடக அரசின் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.செல்வக்குமார், கருநாடக சாலை போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் வி.அன்புகுமார், எழுத்தாளர் அனிதா கு.கிருஷ்ணமூர்த்தி, சுங்கத்துறை மேனாள் கூடுதல் இயக்குநர் கோ.மணிவாசகம், பாவலர் அறிவுமதி, கவியருவி அப்துல்காதர், டி.ஆர்.டி.ஓவின் இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு, கே.அமர்நாத் இராமகிருஷ்ணன்,

பெங்களூரு மாநகராட்சி சிறப்பு ஆணையர் வி.இராம்பிரசாத், தொல்பொருள் ஆய்வாளர் கே.அமர்நாத் இராமகிருஷ்ணன், கூடுதல் டிஜிபி ஹரிசேகரன் ஐபிஎஸ், கூடுதல் டிஜிபி எஸ்.முருகன் ஐபிஎஸ், மும்பை இலமோரியா அறக்கட்டளையின் நிறுவனர் சு.குமணராசன், மேனாள் குடியரசு தலைவர் டாக்டர் எபிஜே அப்துல் கலாமின் பெயர்த்தி, வழக்குரைஞர் நாகூர் ரோஜா, தஞ்சாவூர் பாரத் கல்விக்குழுமத்தின் தலைவர் புனிதா கணேசன், பிஷப் காட்டன் தொழில்முறை மேலாண்மை கல்லூரியின் முதல்வர் சாம்.மார்ட்டீன் கிறிஸ்டோபர், கன்னட வளர்ச்சி ஆணையத்தின் மேனாள் தலைவர் ஜி.சித்தராமையா, இந்தியப் பேனா நண்பர்கள் பேரவைத் நிறுவனத் தலைவர் மா.கருண், பேராசிரியர் கு.வணங்காமுடி மற்றும் கருநாடக தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் அ.தனஞ்செயன் உள்ளிட்டோர் பங்கு பெறுகின்றனர். தமிழ் புத்தக திருவிழாவில் பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு அனுமதி இலவசம். திருவிழாவிற்கு வாகனத்தில் வரும் அனைவருக்கும் வாகனம் நிறுத்தம் செய்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய கட்டுரைகிறிஸ்துமஸ் அலங்காரங்கள் மற்றும் மகிழ்ச்சியான செயல்பாடுகளுடன் பண்டிகை காலத்தை வரவேற்கிறது நெக்ஸஸ் மால்ஸ்
அடுத்த கட்டுரைபெங்களூரில் முதல்முறையாக தமிழ்ப் புத்தகத் திருவிழா: தமிழர் வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்தும் பெரும் விழா

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்