முகப்பு Politics பெங்களூரில் கருநாடக மாநில திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா சிறப்பாக...

பெங்களூரில் கருநாடக மாநில திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா சிறப்பாக கொண்டாட்டம்

0

பெங்களூரு, ஜூன் 3: கருநாடக மாநில திமுக சார்பில் பெங்களூரில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பெங்களூரு ராமசந்திரபுரத்தில் உள்ள திமுக அலுவலகம் கலைஞர் வளாகம் மு.க.ஸ்டாலின் அரங்கத்தில் திங்கள்கிழமை (ஜூன் 3) முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா அக்கட்சியின் அமைப்பாளர் ந.இராம‌சாமி தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதில் திமுகவின் இருவண்ணக் கொடியை ஏற்றி வைத்து, அண்ணா, கலைஞர் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி, புகழ் வணக்கம் செலுத்தி, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் முன்னாள் பொறுப்பு குழு உறுப்பினர் வி.எஸ். மணி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் கே.எஸ்.சுந்தரேசன், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் மு.இராஜசேகர், முருகானந்தம்,

மகளிர் அணி அமைப்பாளர் சற்குணம் இ மதி, மங்கம்மாள், லாவண்யா, இலக்கிய அணித் தலைவர் முருகு தர்மலிங்கம், இளைஞரணி உறுப்பினர்கள் தனுஷ்குமார், சுகவனம், இளங்கோவன், கிளைச் செயலாளர்கள் உட்லண்ஸ் கணேசன், து.பன்னீர் செல்வம், ஜி.குமார், பெமல் கேசவன், மடிவாளா செல்வம், ஜெயபால்.சி, கோ.கருணாநிதி ஜிபிஓ, ஆனந்தன், உத்திரகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் பேசிய ந.இராமசாமி, தேசிய அளவில் அரசியலில் தமிழ்நாட்டை திரும்பிப் பார்க்க வைத்தவர் அண்ணா. அவரைத் தொடர்ந்து முத்தமிழ் அறிஞர் கலைஞர் தேசிய அளவில் மட்டுமின்றி, மாநிலத்தை வளர்ச்சிப்பாதை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்றதில் முக்கியப் பங்கு வகித்தார். அவரைப் பின்பற்றி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநிலத்தில் சிறப்பாக ஆட்சி செய்து, தேசிய அளவில் நாட்டை கட்டமைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறார்.

அவரின் கரத்தை வலுபடுத்துவதில் கர்நாடக மாநில திமுக தனது பங்களிப்பை தொடர்ந்து வழங்கும். அமைச்சர் உதயநிதியின் கரத்தை பலப்படுத்துவதிலும் தொடர்ந்து ஈடுபடுவோம். எங்கள் வாழ்நாள் முழுவதும் பெரியார், அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஆகியோரின் புகழை பாடுவதிலும், பரப்புவதிலும் தொடர்ந்து ஈடுபடுவோம் என கலைஞரின் பிறந்த நாளில் உறுதி ஏற்றுக் கொண்டுள்ளோம் என்றார்.

முந்தைய கட்டுரைஸ்டீல்கேஸ், இந்தியாவில் அதன் புகழ்பெற்ற 25 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் ‘ஒர்க் பெட்டர் மாநாடு’
அடுத்த கட்டுரைநீட் யுஜி 2024ல் அதிக மதிப்பெண் பெற்ற பெங்களூரைச் சேர்ந்த ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட்டின் (ஏஇஎஸ்எல்) 21 மாணவர்கள்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்