முகப்பு Special Story பணி ஓய்வு: ஆர். மன்மோகன்சிங்கிற்கு பிரிவு உபச்சார விழா

பணி ஓய்வு: ஆர். மன்மோகன்சிங்கிற்கு பிரிவு உபச்சார விழா

0

பெங்களூரு, மே 1: தென் இந்திய மண்டல ராணுவ பொறியாளர் சங்கத்தின் (மத்திய அரசுடன் இணைக்கப்பட்டது) தலைவர் ஆர்.மன்மோகன்சிங் பணிஓய்வு பெற்றார். பிரிவு உபச்சார விழாவில் சங்கத்தின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு அவரை வாழ்த்தி பேசினர்.

தென் இந்திய மண்டல ராணுவ பொறியாளர் சங்கத்தின் (மத்திய அரசுடன் இணைக்கப்பட்டது) தலைவர் ஆர்.மன்மோகன்சிங் ஞாயிற்றுக்கிழமை (மே 30) பணி ஓய்வு பெற்றார். இவர் மும்பை, திருநெல்வேலி, மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறப்பாக பணியாற்றி உள்ளார்.

பணி ஓய்வு பெற்ற மன்மோகன் சிங்கிற்கு பெங்களூரு மேக்ரி சந்திப்பில் உள்ள இந்திய விமான நிலைய சமூகக்கூடத்தில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. விழாவில் தென் இந்திய மண்டல ராணுவ பொறியாளர் சங்கத்தின் செயலாளரும், ஐஎன்சியுசியின் தலைவருமான சந்திரசேகர், பொதுச் செயலாளர் கிரிபாபு, துணைத் தலைவர் குமார், என்பிபிஐயின் நிர்வாகி முத்துகுமார், உதவிச் செயலாளர் கோயம்பத்தூரைச் சேர்ந்த துர்காதேவி, முரளி, மதுரையைச் சேர்ந்த பாலமுருகன், சென்னையைச் சேர்ந்த நாகையன், சரவணகுமார், ராஜேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் மன்மோகன் சிங்கை பாராட்டி பேசிய பலரும், சங்கத்தின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தவர் என்றனர்.

பாராட்டு விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மன்மோகன்சிங், மும்பை, திருநெல்வேலி, மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நான் சிறப்பாக பணியாற்றி உள்ளேன். அப்போது பல சவால்களையும், பிரச்னைகளையும் சந்தித்துள்ளேன். என்றாலும், அவற்றிற்கு சிறப்பான தீர்வுகளை பெற்று தந்துள்ளேன். தொழிலாளர்களின் நலனுக்கான பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளேன். அதன் மூலம் அவர்களுக்கு பல்வேறு சலுகைகள் பெற்று தந்துள்ளேன். நான் செய்த பணி எனக்கு நிறைவையும், மகிழ்ச்சியையும் த‌ந்துள்ளது என்றார்.

முந்தைய கட்டுரைஇலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என எதிர்பார்ப்பு
அடுத்த கட்டுரைவிருந்தோம்பல் துறையில் வேலைகளுக்கான தேவை 60% ஆக உயர்வு

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்