முகப்பு Automobile நெக்ஸான் மற்றும் பன்ச் வாகனங்களின் மூலம் எஸ்யுவி சந்தையில் முதன்மை வகிக்கும் டாடா மோட்டார்ஸ்

நெக்ஸான் மற்றும் பன்ச் வாகனங்களின் மூலம் எஸ்யுவி சந்தையில் முதன்மை வகிக்கும் டாடா மோட்டார்ஸ்

• தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக (FY24 வரை) #1 எஸ்யுவி ஆக முதலிடம் வகிக்கும் நெக்ஸான் • 7வது ஆண்டு நிறைவை கொண்டாடும் நெக்ஸான், விற்பனையில் 7 இலட்சம் என்ற மைல்கல் சாதனையையும் கொண்டாடுகிறது. • நிதியாண்டு 24-ல் எஸ்யுவி வகையினத்தில் தர வரிசையில் #1 மற்றும் #2 ஆக நெக்ஸான் மற்றும் பன்ச் இடம்பிடித்தன. • 2024 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிகம் விற்பனையாகும் கார்களில் முதலிடத்தை பன்ச் பிடித்தது. • 5 – நட்சத்திர BNCAP தரநிலை பெற்ற முதல் மின்சார வாகனங்களாக Nexon.ev மற்றும் Punch.ev பெருமை பெறுகின்றன. மேலும் இந்தியாவின் அதிக பாதுகாப்பான மின் வாகனமாக Punch.ev தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

0

பெங்களூரு, ஜூன் 29: இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ், நாட்டிலேயே அதிகம் விற்பனையாகும் SUV -க்கள் என்ற பெருமையை அதன் இரண்டு தயாரிப்புகளான பன்ச் மற்றும் நெக்ஸான், பெற்றிருப்பதன் மூலம் நிதியாண்டு 24 ஐ சிறப்பாக நிறைவு செய்திருக்கிறது.

இத்துறையில் மிகக்கடுமையான போட்டி இருந்த போதிலும், தொடர்ந்து 3 ஆண்டுகளாக இப்பிரிவில் டாடா நெக்ஸான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதற்கு அடுத்தாற்போல மிக நெருக்கமாக இரண்டாவது இடத்தை டாடா பன்ச் பெற்றிருக்கிறது. அதன் 7-வது ஆண்டில் விற்பனையில் 7 இலட்சம் கார்கள் என்ற மகத்தான சாதனையை சமீபத்தில் நிகழ்த்தியிருப்பதன் மூலம் டாடா நெக்ஸான் இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் எஸ்யுவி என்ற அங்கீகாரத்தைப் பெறுகிறது.

கடந்த பல ஆண்டுகளாகவே காம்பேக்ட் எஸ்யுவி பிரிவு கணிசமான வளர்ச்சியை வெளிப்படுத்தி வந்திருக்கிறது. இதன்மூலம் அதிக போட்டிகள் நிறைந்த பிரிவாக எஸ்யுவி உருவெடுத்திருக்கிறது. இப்பிரிவில் தொடர்ந்து முதன்மை நிலையை கொண்டிருப்பதில் டாடா மோட்டார்ஸ் பொறுப்புறுதி கொண்டிருக்கிறது. நெக்ஸான் மற்றும் பன்ச் ஆகிய கார்களுக்கான பல்வேறு புத்தாக்க செயல்பாடுகளில் டாடா மோட்டார்ஸ் தொடர்ந்து செய்து வரும் வலுவான முதலீட்டில் இது நேர்த்தியாக வெளிப்படுகிறது.

முந்தைய கட்டுரைபெங்களுரில் மிகப்பெரிய தள்ளுபடி விற்பனை பண்டிகை, லுலு மிட்நைட் விற்பனை: முக்கிய பிராண்டுகளுக்கு 50% தள்ளுபடி
அடுத்த கட்டுரைபோஸ்போல் மற்றும் மிடாஸ் பள்ளி இணைந்து பெங்களூரில் எதிர்கால தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்கான புதுமையான பாடத்திட்டம் அறிமுகம்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்