முகப்பு Fashion “தி வீக் பெங்களூரு ஃபேஷன்” லோகோ வெளியீடு

“தி வீக் பெங்களூரு ஃபேஷன்” லோகோ வெளியீடு

நிகழ்வை ஜூவல்ஸ் ஆஃப் இந்தியாவுடன் இணைந்து அக்டோபர் மாத கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

0

பெங்களூரு, ஆக. 12: பேஷன் துறையில் பெங்களூரு ஒரு தனித்துவமான இடத்தைப் பெறுவதற்கான முயற்சியாக, அக்டோபரில் திட்டமிடப்பட்ட “தி வீக் பெங்களூரு ஃபேஷன்” லோகோ சனிக்கிழமை இங்கு வெளியிடப்பட்டது.

மாடல்கள் கவிதா, சன்னி காம்ப்ளே மற்றும் ஜாக்கி ஆகியோர் லோகோவை வெளியிட்டு விழாவை மிளிரச் செய்தனர். தனியார் ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியில், மாடல் ஜாக்கி, பெங்களூரில் ஃபேஷன் துறையில் அதிக நிகழ்வுகள் நடப்பதில்லை. மும்பைக்கோ அல்லது வட இந்தியாவிற்கோ செல்ல வேண்டியது அவசியமாகிறது.

“ஐடி ஹப் பெங்களூரை ஃபேஷன் துறையில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடிப்பதற்கு மிகப்பெரிய ஆற்றல் உள்ளது. பெங்களூரில் “தி வீக் பெங்களூரு ஃபேஷன்” ஏற்பாடு செய்யப்படுவது பாராட்டத்தக்கது. இந்த நிகழ்வில் நான் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

விழா ஏற்பாட்டாளர்கள் கிரியேஷன் ஹவுஸின் நிர்வாக இயக்குநர் பரமேஷ் பேசுகையில், அக்டோபரில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் நாட்டின் முன்னணி ஆடை வடிவமைப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். “ஜூவல்ஸ் ஆஃப் இந்தியா எங்களுடன் ஒத்துழைத்துள்ளது. சமூகப் பிரச்சினை ஃபேஷன் நிகழ்வின் கருப்பொருளாக இருக்கும்” என்றார்.

பிரபல மாடல்களான ஜாக்கி, கவிதா, தென்னிந்தியாவின் பிரபல நடன இயக்குனர் ஃபஹிம், டாக்டர் சேத்தன் குமார் மேத்தா, ஐபிஜேஏவின் துணைத் தலைவர் மற்றும் லகாஹ்மி டயமண்ட்ஸ் நிறுவன உரிமையாளர், சுமேஷ் வதேரா, ஆர்ட் ஆஃப் ஜூவல்லரி, ஜோஸ் ஆலுக்காஸின் இயக்குனர் ஜான் ஆலுக்காஸ், ஜூவல் ஆஃப் இந்தியா, விக்ரம் மேத்தா, சியோமி மொபைல் இந்தியாவின் பி.வி.மல்லிகார்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முந்தைய கட்டுரைதனிஷ்கின் புதிய தங்கநகைக் கடை பெங்களூரு ஆர்.ஆர்.நகரில் திறப்பு
அடுத்த கட்டுரைபிரசிடென்சி பல்கலைக்கழகத்தில் பெங்களூரு மெகா சுகாதார முகாம்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்