முகப்பு Bengaluru திருவள்ளுவர் ஜெயந்தி தின விழாவை மகத்தான வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் நன்றி

திருவள்ளுவர் ஜெயந்தி தின விழாவை மகத்தான வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் நன்றி

0

பெங்களூரு, ஜன. 17: திருவள்ளுவர் ஜெயந்தி தின விழாவை மகத்தான வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அகில இந்திய அமைப்புச்சாரா தொழிலாளர் காங்கிரஸின் தென் மாநிலங்களில் ஒருங்கிணைபாளரும், திருவள்ளுவர் ஜெயந்தி தின விழாக் குழுத் தலைவருமான‌ பைப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ் தெரிவித்தார்.

பெங்களூரு அல்சூர் ஏரிக்கரையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள இடத்தில் செவ்வாய்க்கிழமை பைப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ் தலைமையில் திருவள்ளுவர் ஜெயந்தி தின விழா நடைபெற்றது. விழாவில் கர்நாடகத்திலிருந்து மட்டுமின்றி தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கேரளம் உள்ளிட்ட அனைத்து பகுதியிலிருந்தும் ஏராளமான மக்கள் ஜாதி, மதம், மொழி உள்ளிட்டவைகளை மறந்து திரளாக கலந்து கொண்டு திருவள்ளுவர் ஜெயந்தி தின விழாவை மகத்தான முறையில் வெற்றி பெறச் செய்தனர். விழாவை வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியை பைப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் கர்நாடகாவில் சுமார் 90 லட்சம் தமிழ் பேசும் கன்னடர்கள் வாழ்கின்றனர். ஆனால், இவர்களுக்கு அனைத்து கட்சிகளிலும் ஆட்சியில் அதிகாரப் பதவிகள் வழங்காதது வேதனையளிக்கிறது. எனவே தமிழ் பேசும் கன்னடர்களுக்கு அனைத்துக் கட்சிகளிலும் குறைந்தபட்சம் 1 எம்.பி, 5 எம்எல்ஏ, 2 எம்எல்சி பதவிகளுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். தற்போதைய ஆளும் காங்கிரஸ் ஆட்சியில், 2 வாரியங்களில் 2 பேரை தலைவர்களாக‌ நியமிக்க‌ வேண்டும்.

கர்நாடகாவில் தமிழ் பேசும் கன்னடர்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி மொழி வளர்ச்சிக்கும் பங்காற்றி வருகின்றனர். எந்த ஒரு பதவியும் கிடைக்காததால் ஏமாற்றமும், வருத்தமும் அடைந்துள்ளனர். அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி தகுதியான அந்தஸ்து வழங்கி கவுரவிக்க வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ், பாஜக, மஜத உள்ளிட்ட அனைத்து கட்சிகளிலும் கன்னடம் பேசும் தமிழர்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்று பைப்பனஹள்ளி டாக்டர் டி.ரமேஷ் கேட்டுக் கொண்டார்.

முந்தைய கட்டுரைபெங்களூரில் திருவள்ளுவர் ஜெயந்தி தின‌விழா கோலகலமாக கொண்டாட்டம்
அடுத்த கட்டுரைபிரிகேட் அறக்கட்டளை வெங்கடப்பா ஆர்ட் கேலரியின் மறுசீரமைப்புப் பணிகள் தொடக்கம்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்