முகப்பு Politics தாழ்ந்த தமிழினத்தை தலைநிமிர செய்தவர் அறிஞர் அண்ணா: கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி

தாழ்ந்த தமிழினத்தை தலைநிமிர செய்தவர் அறிஞர் அண்ணா: கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி

0

பெங்களூரு, செப். 15: தாழ்ந்த தமிழினத்தை தலைநிமிர செய்து தமிழர்களுக்கு விடியலை ஏற்படுத்தியவர் அறிஞர் அண்ணா என்று கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி புகழாரம் சூட்டினார்.

கர்நாடக மாநில திமுக சார்பில் அறிஞர் அண்ணாவின் 115வது பிறந்த நாள் விழா பெங்களூரு ராமச்சந்திர புரத்தில் மாநில தலைமை கழக கட்டிடமான கலைஞரகத்தில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாநில அவைத்தலைவர் மொ. பெரியசாமி தலைமை தாங்கினார். முன்னாள் பொறுப்பு குழு உறுப்பினர்கள் வி.எஸ். மணி, கே.எஸ் சுந்தரேசன், இரா.நாம் தேவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அண்ணா சிலைக்கு மாநில அமைப்பாளர் ந. இராமசாமியும் கலைஞர் சிலைக்கு மாநில பொருளாளர் கே.தட்சணாமூர்த்தி மாலை அறிவித்தனர். மாநில இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மு.ராஜசேகர், ந.விக்ரம், முருகானந்தம், லியோ ராஜன் ஆகியோர் இனிப்பு வழங்கினர்.

பின்னர் பேசிய ந.இராமசாமி, அண்ணாவின் 115 வது பிறந்த நாளை கொண்டாடுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். தாழ்ந்த தமிழினத்தை தலைநிமிர செய்து தமிழர்களுக்கு விடியலை ஏற்படுத்தியவர் அறிஞர் அண்ணா. ஏழைகளுக்கான கட்சி திமுக என்பதை உணர்த்தியவர் அண்ணா. அதனால்தான் பல தேர்தல்களில் பெரும் செல்வதற்களுக்கு எதிராக ஏழைகளை அடையாளம் கண்டு, அவர்களை திமுக சார்பில் போட்டியிடச் செய்து, வெற்றி பெறவும் செய்தவர் அண்ணா.

அண்ணாவின் பெருமைகளையும், நற்பண்புகளை சொல்லிக் கொண்டே போகலாம். அவரின் ஆங்கிலப் புலமைக்கு வியர்ந்து பாராட்டியவர் முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய். அண்ணாவில் வழியில் தற்போது தமிழ்நாட்டை தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் திறமையாக ஆட்சி செய்து வருகிறார். திராவிடத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் போற்றத்தக்க வகையில் வளர்த்து வருகிறார் என்றார்.

அண்ணாவின் பெருமைகளை முன்னாள் பொறுப்பு குழு உறுப்பினர் ஏ.டி.ஆனந்தராஜ், இளங்கோவன், துணை செயலாளர்கள் ஆற்காடு அன்பழகன், எம்.ஆர்.பழம்நீ, நாம் தேவ், மாநில மகளிரணி அமைப்பாளர் சற்குண இளமதி ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் வெள்.செல்வ‌க்குமார், உட்லாண்ட்ஸ் கணேசன், மங்கம்மா உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய கட்டுரைகற்றல் தீர்வுகளை வழங்கும் மணிப்பால் மெட்ஏஸ் அறிமுகம்
அடுத்த கட்டுரைபெங்களூரில் ஓர்ரா (ORRA) 9 வது சில்லறை விற்பனைக் கடை திறப்பு

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்