முகப்பு Politics ஜூன் 3 இல் கருநாடக மாநில திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு...

ஜூன் 3 இல் கருநாடக மாநில திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா

0

பெங்களூரு, மே 28: கருநாடக மாநில திமுக சார்பில் ஜூன் 3 ஆம் தேதி பெங்களூரில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற உள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநில அமைப்பாளர் ந.இராமசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: பெங்களூரு ராமசந்திரபுரத்தில் உள்ள திமுக அலுவலகம் கலைஞர் வளாகம் மு.க.ஸ்டாலின் அரங்கத்தில் மே 3 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு பெங்களூரில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற உள்ளது.

இதில் திமுகவின் இருவண்ணக் கொடி ஏற்றி வைத்து, கலைஞர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி, புகழ் வணக்கம் செலுத்தி, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்படும். விழாவில் கட்சித் தோழர்கள் அனைவரும் தவறாது கலந்துக் கொண்டு சிறப்பிக்கக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

முந்தைய கட்டுரைபெங்களூரில் டாக்டர் அனில் எஸ்.மேத்தாவின் தொலைநோக்கு தலைமையின் கீழ் செரன் மெட் லவுஞ்சின் முதல் கிளினிக் தொடக்கம்
அடுத்த கட்டுரைகல்வியில் வேகம் எடுத்த சென்னைஸ் அமிர்தா குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன்ஸ்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்