முகப்பு Politics ஜன. 22 இல் கர்நாடக மாநில திமுக சார்பில் ‘திராவிட கீர்த்திய ஷிகரா தளபதி மு.க.ஸ்டாலின்’...

ஜன. 22 இல் கர்நாடக மாநில திமுக சார்பில் ‘திராவிட கீர்த்திய ஷிகரா தளபதி மு.க.ஸ்டாலின்’ கன்னட சிறப்பு மலர் வெளியீட்டு விழா

0
Minister Anbil Mahesh Poiyamozhi.

பெங்களூரு, ஜன. 17: கர்நாடக மாநில திமுக சார்பில் புத்தாண்டு பொங்கல் விழா மற்றும் திராவிட கீர்த்திய ஷிகரா தளபதி மு.க.ஸ்டாலின் கன்னட சிறப்பு மலர் வெளியீட்டு விழா ஜன. 22 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநில அமைப்பாளர் ந.இராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: பெங்களூரு அல்சூரில் அமைந்துள்ள பெங்களூரு தமிழ்ச்சங்கம், திருவள்ளுவர் அரங்கத்தில் ஜன. 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கர்நாடக மாநில திமுக சார்பில் புத்தாண்டு பொங்கல் விழா மற்றும் திராவிட கீர்த்திய ஷிகரா தளபதி மு.க.ஸ்டாலின் கன்னட சிறப்பு மலர் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி தலைமையில், மாநில அவைத் தலைவர் மொ.பெரியசாமி கட்சியின் கொடியை ஏற்றி வைக்கிறார். அக்கட்சியின் மாநில இளைஞர் அணி துணை அமைபாளர் மு.இராஜச்சேகர் வரவேற்புரை நிகழ்த்துகிறார். திமுக மாநில பொருளாளர் கே.தட்சிணாமூர்த்தி, துணை அமைப்பாளர்கள் ஜி.இராமலிங்கம், பி.இராஜேந்திரன், குமுதா, மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சிக்பெட் எம்.ராமன், கே.சிகாமணி, இரா. அன்பழகன், மைசூரு எஸ்.பிரான்சிஸ், பத்ராவதி எல்.சிவலிங்கம், முருகமணி செல்வம், முன்னாள் மாநில நிர்வாகிகள் இரா.நாமதேவ், வி.எஸ்.மணி, ஏ.டி.ஆனந்தராஜ், கே.எஸ். சுந்தரேசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

சிறப்புரையை தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கன்னட வளர்ச்சி ஆணையத்தின் முன்னாள் தலைவர் எஸ்.ஜி.சித்தராமையா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கோவா மாநிலங்களின் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ எம்.எல்.ஏ, கர்நாடக மேலவை எதிர்க்கட்சித் தலைவர் பி.கே.ஹரிபிரசாத், சிவாஜிநகர் தொகுதி சட்டப்பேரவை எம்.எல்.ஏ ரிஸ்வான் அர்ஷத், தமிழ்நாடு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ, ஓசூர் மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா, மைசூரு மடாதிபதி ஞானபிரகாஷ், ஹுன்சூர் டாக்டர் மதுபிரசாத், எம்.பிரசன்னகுமார், கனகராஜ், டாக்டர் கே.வி.ஹரீஷ், ஜமகண்டி ஆதியப்பா மீசி, அசோக் சக்ரவர்த்தி, நாகராஜ்,

வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த‌ எம்.நடேஷ் M.sc, LLB, ஆர்.பாலாஜிசிங் B.Com, LLB, இளைஞர் அணி நிர்வாகிகள் டி.சிவமலை, எம்.முருகானந்தம், தினேஷ், மு.பரசுராமன் , இலக்கிய அணி நிர்வாகிகள் புலவர் முருக தருமலிங்கம், போர்முரசு கதிரவன் ஆற்காடு அன்பழகன், எம்.ஆர். பழம்நீ, வெள். செல்வக்குமார், மகளிர் அணி நிர்வாகிகள் . அம்மாயி ஜெயவேல், சற்குணா மங்கம்மாள், பி.காயத்திரி, அமுதாபட்டுசாமி, சாந்தி, மணிமேகலை தொ.மு.ச பேரவை நிர்வாகிகள் மு.நாகப்பராஜன், மு.பொன்னம்பலம், க.நாராயணசாமி, சி.ஜெயயால், த.திருமலை, தயாள்குமார், து.பிரபு, ஜி.குமார், காஞ்சி சிவசங்கரன்,

கிளை கழக நிர்வாகிகள் செல்வம், சகாயபுரம் ஆர்.குப்புசாமி, சகாயபுரம் கணேசன், அல்சூர் பலராமன், செ.தமிழ்ச்செல்வன், டி.துரை, எம்.குப்புசாமி, உட்லேண்ட்ஸ் கணேசன், எ.தங்கராஜ், ஏ.இராஜேந்திரன், எஸ்.ஏழுமலை, தங்கவயல் அருணாசலம், பொன்.சாரங்கபாணி, வே.முனிரத்தினம், கு.அறிவழகன், எ.வி.மதியழகன், சேகரன், மணிவண்ணன், ஜே.மதிவாணன், மைசூர் அரவிந்த், ரஜினி ஆறுமுகம், பத்திராவதி ஆர்.கோவிந்தசாமி, கே.மணி, கே.பி.உத்தமராயன், ஆர்.சண்முகம், சிவமொக்கா எஸ்.நசுருல்லா, குப்புசாமி, மங்களூர் ஆர்.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மாநில திமுக தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த இரா.கணபதி B.E, நன்றியுரை ஆற்றுகிறார்.

திராவிட மாடல் ஆட்சி குறித்து கன்னட அறிஞர்கள் எழுதிய ” திராவிட கீர்த்திய ஷிகரா தளபதி எம்.கே.ஸ்டாலின் என்ற கன்னட சிறப்பு மலரை தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுகிறார்

முந்தைய கட்டுரைசாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் கண் காயங்களுக்கு உடனடி கவனம் தேவை
அடுத்த கட்டுரைவிபத்தில் தலையில் பலத்த காயமடைந்த 36 வயது இளைஞருக்கு அதிசயமான நியூரோ மறுவாழ்வு அளித்த சக்ரா வேர்ல்ட் மருத்துவமனையின் மருத்துவர்கள்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்