முகப்பு Politics சிவாஜி நகர் திருவிழா: காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ரிஸ்வான் தலைமையில் கோலாகல கொண்டாட்டம்

சிவாஜி நகர் திருவிழா: காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ரிஸ்வான் தலைமையில் கோலாகல கொண்டாட்டம்

0

பெங்களூரு, மார்ச் 19: பெங்களூரு சிவாஜி நகர் திருவிழா காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ரிஸ்வான் அர்ஷத் தலைமையில் கோலாகலமாக‌ கொண்டாடப்பட்டது.

பெங்களூரு நகரில் சிவாஜி நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள ரஸ‌ல் மார்கெட் பகுதியில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ரிஸ்வான் அர்ஷ‌த் தலைமையில் சிவாஜி நகர் திருவிழா கொண்டாடப்பட்டது. நூற்றாண்டு பழமை வாய்ந்த ரஸ‌ல் மார்கெட் பகுதி முழுவதுமாக புனரமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வளர்ச்சி பணியை கொண்டாடும் விதமாக சிவாஜி நகர் திருவிழா கொண்டாடப்பட்டது.

திருவிழாவை அடுத்து ரஸ‌ல் மார்க்கெட் பகுதி முழுவதும் வண்ண விளக்குகள், துணிகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்த நிலையில் கிராமங்களில் கொண்டாடப்படும் திருவிழாவைப் போல சிறுவர்களுக்கு இலவசமாக சிறுவர்களுக்கான ரயில் பயணம், குதிரை ராட்டினம், சறுக்கு விளையாட்டு, துப்பாக்கி சுடுதல், வில்வித்தை விளையாட்டு ராட்டினம் என பல்வேறு விளையாட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் ஆர்வத்துடன் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் விளையாடி மகிழ்ச்சியுற்றனர்.

சிறுவர்களுக்கு இலவசமாக பாணி, மாசால் பூரி, பஞ்சுமிட்டாய், பாப்கார்ன் உள்ளிட்ட தின்பண்டங்களும் கொடுக்கப்பட்டன. திருவிழாவில் பல்வேறு கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும் பாரம்பரிய கலைக் குழுக்கள் ஆன புலி ஆட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. தொகுதியின் வளர்ச்சியை கொண்டாடும் விதமாகவும் மக்கள் ஒன்றிணைந்து சமத்துவத்தை பரப்புவதற்காகவும் சிவாஜி நகர் திருவிழா கொண்டாடப்படுவதாக அத்தொகுதியின் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ரிஸ்வான் அர்ஷ‌த் தெரிவித்துள்ளார்.

பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த திருவிழாவை பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டவர்களும் கலந்து கொண்டு ரசித்தனர். கரோனா கலத்தில் வீட்டில் முடங்கி கிடந்த பொது மக்களுக்கு, நீண்ட நாள்களுக்கு பிறகு, சிவாஜிநகரில் நடைபெற்ற திருவிழா மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்தது. சிவாஜிநகர் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்து தந்த சட்டப்பேரவை உறுப்பினர் ரிஸ்வான் அர்ஷத்தை அத்தொகுதி மக்கள் வாழ்த்தினர்.

சிவாஜிநகர் தொகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிர்ஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரிஸ்வான் அர்ஷத் அத்தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றி, அத்தொகுதியில் உள்ள மத சிறுபான்மை, மொழி சிறுபான்மையினருக்கு பாராபட்சமின்றி நல உதவிகளை செய்து, பல்வேறு சாதனைகளை ரிஸ்வான் அர்ஷத் செய்து வருவதாக சிவாஜிநகர் தொகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். அடுத்த நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அவருக்கு வாக்களித்து, வெற்றி பெறச் செய்யப்போவாதாகவும் தெரிவித்தனர்.

முந்தைய கட்டுரைவிஆர்ஓ ஹாஸ்பிடாலிட்டி பிரீமியம்-லவுஞ்ச் பார் மிராஜின் 2வது ஆண்டு விழா: பாலிவுட் நடிகை மலாய்கா அரோரா பங்கேற்பு
அடுத்த கட்டுரைட்வின் ஹெல்த் முழு உடல் டிஜிட்டல் ட்வின் வகை 2 நீரிழிவு மற்றும் நாள்பட்ட வளர்சிதை மாற்ற நோய்களின் நிவாரணத்திற்கான புரட்சிகர மருத்துவ சிகிச்சையை உருவாக்கம்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்