முகப்பு Health சித்தமருத்துவத்தின் பயனை தமிழர்கள் மட்டுமின்றி அனைவரும் பெற வேண்டும்: சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர் மு.கண்ணன்

சித்தமருத்துவத்தின் பயனை தமிழர்கள் மட்டுமின்றி அனைவரும் பெற வேண்டும்: சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர் மு.கண்ணன்

0

பெங்களூரு, ஜூன் 7: சித்தர்களால் சமூகத்திற்கு அடையாளம் காணப்பட்ட தமிழ் சித்த மருத்துவம் அனைத்து நோய்களையும் குணமாக்கும் மாமருந்து. இதன் ப‌யனை தமிழர்கள் மட்டுமின்றி அனைவரும் பெற வேண்டும் என்று சித்த மருத்துவ ஆராய்ச்சி விஞ்ஞானி மு.கண்ணன் தெரிவித்தார்.

ஓன்றிய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை கீழ் இயங்கி வரும் சித்த மருத்துவ ஆராய்ச்சி பிரிவு கடந்த 7 ஆண்டுக்கு முன் பெங்களூரு கெம்பேகவுடா பேருந்து நிலையம் அருகில் தொடங்கப்பட்டது. அதன் 8 வது ஆண்டை முன்னிட்டு கர்நாடக தமிழ் பத்திரிக்கையாளர் சங்க ஒத்துழைப்பில் குயின்ஸ் சாலை சங்க அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை 10.30 மணி முதல் பகல் 2 மணி வரை நடைபெற்றது. முகாமை வாசன் கண்மருத்துவமனை குழுமத்தின் இயக்குனர் ஏ.சுந்தரமுருகேசன் தொடங்கி வைத்தார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வாசன் கண் மருத்துவமனை குழுமத்தின் இயக்குனர் சுந்தரமுருகேசன் பேசும்போது, சித்த மருத்துவம் நமது பாரம்பரிய மருத்துவமாக உள்ளது. இருப்பினும் சித்த மருத்துவத்தில் நவீன அறிவியலை பயன்படுத்த வேண்டும். அப்போது தான் மக்களிடம் ஈர்ப்பு கிடைக்கும். நாம் நல்ல நோக்கத்திற்காக செயல்படும்போது, அது மக்களின் ஆதரவு பெற்றிருக்க வேண்டும். கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தினர் தொடர்ந்து இது போன்ற நல்ல பணிகளை மேற்கொள்ள வேண்டும். அவர்களுக்கு வாசன் கண் மருத்துவமனையின் குழுமமும் உதவியாக இருக்கும் என்றார்.

சித்த மருத்துவ ஆராய்ச்சி விஞ்ஞானி மு.கண்ணன் பேசும்போது, சித்த மருத்துவம் என்பது அகத்தியர் உள்பட சித்தர்கள் தமிழ் பாரம்பரிய மருத்துவத்தை அறிமுகம் செய்தனர். இது இக்காலம் மட்டுமில்லாமல் முக்காலத்திற்கும் அழியாமல் மக்களின் வாழ்வியலோடு கலந்திருக்கும். அனைத்து நோய்களையும் தீர்க்கும் மாமருந்தாகும். தமிழர்கள் மட்டுமின்றி, அனைவரும் சித்த மருத்துவத்தின் பயனை அனைவரும் பரவலாக பெற்று பயனடைய‌ வேண்டும். ஆரோக்கியமான சமுதாயமே நாட்டின் சொத்து. அதற்கு தேவையான மருத்துவத்தை நாங்கள் தொடர்ந்து செய்து, மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவோம் என்றார்.

மருத்துவர்கள் மாணிக்க வாசகம், இலக்கியா ஆகியோர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் தமிழர்கள் மட்டுமின்றி, கன்னடம், தெலுங்கு, மலையாள மொழிகளைச் சேர்ந்த சகோதரர், சகோதரிகளும் திரளாக கலந்து கொண்டு, சிகிச்சை பெற்று சென்ற‌னர்.

முந்தைய கட்டுரைபெங்களூரு லுலு மாலில் உலக சுற்றுச்சூழல் தினமான 2024 இல் நிலைத்தன்மை, எதிர்காலத்தை நோக்கிய படி
அடுத்த கட்டுரைபெங்களூரைச் சேர்ந்த ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட்டின் (ஏஇஎஸ்எல்) 21 மாணவர்கள் நீட் யுஜி 2024ல் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்