முகப்பு Bengaluru கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சித்ரகலா பரிஷத்தில் கைவினைப்பொருட்கள் விற்பனையை நடிகை காருண்யா ராம் தொடக்கி...

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சித்ரகலா பரிஷத்தில் கைவினைப்பொருட்கள் விற்பனையை நடிகை காருண்யா ராம் தொடக்கி வைத்தார்

0

பெங்களூரு, டிச. 16: கர்நாடக சித்ரகலா பரிஷத்தின் வளாகத்தில் ‘தி சோக்’ (மார்க்கெட்) கிராண்ட் பிளே மார்க்கெட் ஏற்பாடு செய்யப்பட்டது. டிசம்பர் 16 முதல் டிசம்பர் 25 வரை நடைபெறும் இந்த கைவினைப் பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனையை நடிகை காருண்யா ராம், கிரிஷ்மா கவுடா தொடங்கி வைத்தார். சித்ரகலா பரிஷத் தலைவர் டாக்டர். பி.எல். சங்கர் சிறப்பு விருந்தினராக‌ கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசிய நடிகை காருண்யா ராம் ‘சூக் மார்க்கெட் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். கிறிஸ்மஸ் காலத்தில் சித்ரகலா பரிஷத்தில் இந்தக் கண்காட்சியை நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஒவ்வொரு பொருளும் அற்புதம் மற்றும் வித்தியாசமானது. குறிப்பாக வெளிர் நிற பருத்தி, கலங்கரி, ஆபரணங்கள், ஓவியங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். வீட்டு அலங்காரத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் இங்கே உள்ளன. பெண்கள் மற்றும் கலைஞர்கள் விரும்பும் பல விஷயங்கள் உள்ளன. உற்பத்தியாளர் நேரடியாக பொருட்களை விற்பனை செய்வதால் இடைத்தரகர்கள் இல்லை. எனவே விலைகள் அதிகமாக இல்லை. அனைவரும் இங்கு சென்று உங்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்க வேண்டும்’ என நடிகை காருண்யா ராம் குஷி பகிர்ந்துள்ளார்.

இந்த கண்காட்சி குறித்து நடிகை கிரிஷ்மா கவுடா கூறியது: வாடிக்கையாளர்களைக் கவரும் பல பொருட்கள் இங்கே உள்ளன. இந்த கண்காட்சியில் பெண்கள் அதிகம் விரும்பும் டிசைனர் பேக்குகள், காட்டன் புடவைகள், நவீன பாணி நகைகள் என பல வகைகள் உள்ளன. அனைவரும் வந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார்.

தி சோக் கைவினைப்பொருள் கண்காட்சி உள்ளூர் கலைஞர்களை ஆதரிக்கவும், பல்வேறு பொருட்களைக் கண்டறியவும் பொதுமக்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்த 10 நாள் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை கண்காட்சியில் நாடு முழுவதும் உள்ள கலைஞர்கள் தங்கள் பொருட்களைக் காட்சிப்படுத்துகின்றனர். அலங்கார பொருட்கள், பல்வேறு ஆடைகள், நகைகள் இங்கு கிடைக்கும். வீட்டு அலங்கார பொருட்கள், கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஆடைகள், மர பொம்மைகள், பெண்களுக்கான நகைகள், படுக்கை துணி, கலை வேலைப்பாடுகள் மற்றும் நூற்றுக்கணக்கான பல்வேறு பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. உங்கள் வீட்டுத் தோட்டத்தை அலங்கரிக்கவும், ஆடைகள் மற்றும் நகைகளை வாங்கவும், இந்த கண்காட்சியைப் பார்வையிடலாம். இந்த கண்காட்சி டிச. 16 முதல் டிச. 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சி நாள் தோறும் காலை 11.30 மணி தொடங்கும்.

முந்தைய கட்டுரைகட்சி வாய்ப்பு வழங்கினால் ராஜாஜிநகர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தயார்: முன்னாள் துணை மேயர் பி.எஸ்.புட்டராஜு
அடுத்த கட்டுரைபேராசிரியர் அன்பழகன் இறுதி மூச்சி வரை கலைஞர் கருணாநிதியுடன் தோளோடு தோள் நின்று கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டார்: புதுக்கோட்டை விஜயா பேச்சு

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்