முகப்பு Politics காங்கிரஸ் மேலிடம் டாக்டர் யூனாஸ் ஜோன்ஸை எம்எல்சியாக்க கிறிஸ்துவர்கள் கோரிக்கை

காங்கிரஸ் மேலிடம் டாக்டர் யூனாஸ் ஜோன்ஸை எம்எல்சியாக்க கிறிஸ்துவர்கள் கோரிக்கை

0

பெங்களூரு, மே 30: கிறிஸ்துவ மக்களின் மேன்மைக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் டாக்டர் யூனாஸ் ஜோன்ஸை கர்நாடக சட்டமேலவைக்கு தேர்வு செய்ய சோனியா காந்தி, ராகுல்காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு கிறிஸ்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து பேராயர் டாக்டர் என்.டேவிட் உள்ளிட்ட கிறிஸ்துவ மக்கள் காங்கிரஸ் கட்சியின் மேலிடத்தலைவர்களுக்கு வைத்துள்ள கோரிக்கையில் தெரிவித்துள்ளதாவது: டாக்டர் யூனாஸ் ஜோன்ஸ், கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியில் மனித உரிமைகள் துறையின் துணைத் தலைவராக உள்ளார். இவர் நன்கு படித்தவர். 25 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி, ஏழை மற்றும் அடித்தளத்தில் உள்ளவர்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வருகிறார்.

மக்களின் வளர்ச்சிகாக‌ எந்தவொரு பாகுபாடும் இல்லாமல் சமூக பணியாற்றி வரும் இவர், திரைப்பட நடிகர், ஸ்டண்ட் இயக்குனர் மற்றும் தென்னிந்திய திரைப்படங்களின் கில்டில் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் உள்ளார். சமூக பணிகள் மற்றும் திரைப்படங்களில் பணியாற்றிதற்காக சர்வதேச அளவில் மட்டுமின்றி தேசிய, மாநில, மாவட்ட அளவில் 75 முதல் 80 க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். 25 ஆண்டுகளால காங்கிரச் கட்சிப்பணி, பல்வேறு சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட டாக்டர் யூனாஸ் ஜோன்ஸ், காங்கிரஸின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே அவருக்கு கிறிஸ்தவ சமுதாய மக்களுக்கு கட்சியில் ஒதுக்கப்படும் சட்டமேலவை உறுப்பினர் பதவியை வழங்கி கௌரவிக்க வேண்டும். மறுக்கும் பட்சத்தில் சட்டமன்ற‌த் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அல்லது கேபிசிசி சிறுபான்மைத் துறைத் தலைவர் பதவி அல்லது ஏதேனும் வாரியங்கள் மற்றும் கழக‌ங்களின் தலைவர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து டாக்டர் யூனாஸ் ஜோன்ஸ் செய்தியாளர்களிடம் கூறியது: கடந்த 25 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் பதவிகளில் சிறப்பாக பணியாற்றி, கட்சியின் வளர்ச்சிக்கு பெருமளவில் உதவியுள்ளேன். பல்வேறு
சமுகப்பணிகளில் ஈடுபட்டு, ஏழை, அடித்தளத்தில் உள்ள மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறேன். கிறிஸ்துவ மக்களின் வளர்ச்சிக்காக மொழி பேதமின்றி பாடுபட்டு வருகிறேன்.

எனது சமுதாய மக்களின் கோரிக்கை ஏற்று காங்கிரஸ் கட்சி மேலிடம் எனக்கு கர்நாடக சட்டமேலவையில் வாய்ப்பளித்தால், கிறிஸ்துவ மக்கள் மட்டுமின்றி வேற்று மதத்தை சேர்ந்த அனைவரின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன். நன்கு படித்த இளைஞரான எனக்கு சட்டமேலவை அல்லது வாரியம், கழங்கத் தலைவர், கேபிசிசி சிறுபான்மைத் துறைத் தலைவர் பதவி வழங்கினாலும் திறமையாக நிர்வகித்து, மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்.

எனது திறமை, உயர்கல்வி மற்றும் சமூகப்பணிகளை காங்கிரஸ் கட்சியின் மேலிடம் அங்கீகரித்து, எந்த பதவியை வழங்கினாலும், அவற்றை சிறப்பாக நிர்வகித்து, காங்கிரஸ் கட்சிக்காக மட்டுமின்றி, மாநிலத்தின் வளர்ச்சி, கிறிஸ்துவ மக்கள் உள்ளிட்ட சிறுபான்மை, மொழி சிறுபான்மை மக்களின் வளர்ச்சிக்காக கடுமையாக பாடுபடுவேன் என்றார்.

முந்தைய கட்டுரைஷ்னீடர் எலக்ட்ரிக் இந்தியாவின் பெங்களூரில் மிகப் பெரிய பணியாளர் வளாகம் திறப்பு
அடுத்த கட்டுரைஸ்டீல்கேஸ், இந்தியாவில் அதன் புகழ்பெற்ற 25 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் ‘ஒர்க் பெட்டர் மாநாடு’

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்