முகப்பு Politics கர்நாடக மாநில திமுக சார்பில் செந்தமிழ் தென்றல் இனமான பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழாக் கூட்டம்

கர்நாடக மாநில திமுக சார்பில் செந்தமிழ் தென்றல் இனமான பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழாக் கூட்டம்

0

பெங்களூரு, டிச. 11: கர்நாடக மாநில திமுக சார்பில் செந்தமிழ் தென்றல் இனமான பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழாக் கூட்டம் பெங்களூரில் டிச. 18‍ ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநில அமைப்பாளர் ந.இராமசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கர்நாடக மாநில திமுக சார்பில் செந்தமிழ் தென்றல் இனமான பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழாக் கூட்டம் டிச. 18 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி அளவில் பெங்களூரு இராமசந்திரபுரத்தில் உள்ள மாநில திமுக கலைஞரக வளாகம், தளபதி மு.க.ஸ்டாலின் மணிவிழா அர‌ங்கத்தில் தொடங்கி நடைபெற உள்ளது.

இதில் மாநில பொருளாளர் கே.தட்சிணாமூர்த்தி கட்சிக் கொடியை ஏற்றி வைக்க உள்ளார். தமிழ் வாழ்த்தை எம்.ஆர். பழம்நீயும், வரவேற்புரையை மாநில அவைத் தலைவர் மொ.பெரியசாமியும், தலைமையை மாநில அமைப்பாளர் ந.இராமசாமியும் வகிக்கின்றனர்.

முன்னிலையை துணை அமைப்பாளர்கள் பி.இராஜேந்திரன், குமுதா. பொதுகுழு உறுப்பினர்கள் சிக்பேட் எம்.இராமன், கே.சிகாமணி, இரா.அன்பழகன், மைசூரு எஸ். பிரான்சிஸ், பத்ராவதி எல்.சிவலிங்கம், முருகமணி வகிக்கின்றனர். சிறப்புரை புதுக்கோட்டை விஜயா ஆற்றுகிறார்.

நிகழ்ச்சியில் முன்னாள் நிர்வாகிகள் இரா.நாம்தேவ், வி.எஸ்.மணி, ஏ.டி.ஆனந்தராஜ், கே.எஸ்.சுந்தரேசன், இளைஞர் அணி நிர்வாகிகள் டி.சிவமலை, மு.இராஜசேகர், மு.முருகாநந்தம், தினேஷ் பரசுராமன், இலக்கிய அணி நிர்வாகிகள் புலவர் முருகு தருமலிங்கம், போர்முரசு கதிரவன், ஆற்காடு அன்பழகன், வெள்.செல்வகுமார், மகளிர் அணி நிர்வாகிகள் அம்மாயி ஜெய்வேல், பி.காயத்ரி, அமுதா பட்டுசாமி, மணிமேகலை தொ.மு.ச. பேரவை நிர்வாகிகள் மு.பொம்மம்பலம், த.திருமலை, க.நாரயனசாமி, து.பிரபு, ஜி.குமார், ஜெயபால், காஞ்சி சிவசங்கர் ஆகியோர் பங்கு கொள்கின்றனர்.

நிகழ்ச்சியில் கிளைக் கழக நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்கள், பொது மக்கள் அனைவ‌ரும் கல‌ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நிறைவில் ஜி.இராமலிங்கம் நன்றியுரை ஆற்றுகிறார்.

முந்தைய கட்டுரைதென்மேற்கு ரயில்வேயின் பொது மேலாளர் சஞ்சீவ் கிஷோர், அசோகபுரம் மத்திய பணிமனையின் ஆண்டு ஆய்வு மேற்கொண்டார்
அடுத்த கட்டுரைToday Horoscope : இன்றைய ராசிபலன் (12.12.2022)

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்