முகப்பு Politics கர்நாடக திமுக சார்பில் பெங்களூரு, மைசூரில் தமிழ்நாடு முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த...

கர்நாடக திமுக சார்பில் பெங்களூரு, மைசூரில் தமிழ்நாடு முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

0

பெங்களூரு, மார்ச் 2: கர்நாடக மாநில திமுக சார்பில் பெங்களூரு, மைசூரில் தமிழ்நாடு முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இது குறித்து அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு: பெங்களூரு, மைசூரில் கர்நாடக மாநில திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஆகியோரின் வழியில் தமிழ்நாட்டில் நல்லாட்சி நடத்தி வரும் திராவிட மாடல் அரசியல் ஒளி விளக்கு முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த நாள் விழா புதன்கிழமை (மார்ச் 1) சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த நாள் விழா கர்நாடக மாநில திமுக சார்பில் பெங்களூரு ராமசந்திரபுரத்தில் மாநில அமைப்பாளர் ந. இராமசாமி தலைமையில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் பொருளாளர் தட்சிணாமூர்த்தி, நிர்வாகிகள் ஏ.டி.ஆனந்தராஜ், கே.எஸ் சுந்தரேசன், ஆற்காடு அன்பழகன், திருமலை, சந்திரசேகர், விக்ரம், லியோ, முருகு தர்மலிங்கம், உட்லண்ட்ஸ் கணேசன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட‌ அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது

சாம்ராஜ் பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளிப் பிள்ளைகளுக்கு நல உதவி, இனிப்புகள் வாங்கி கொண்டாடபட்டது. செயலாளர் நாகராஜ், மாநில அமைப்பாளர் ந.இராமசாமி, துணை அமைப்பாளர் ராமலிங்கம்,முன்னாள் நிர்வாகிகள்.வி.எஸ்.மணி, ஏ.டி.ஆனந்தராஜ், இளைஞர்அணி சதீஷ், மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு விழாவை சிற‌ப்பித்தனர்.

மைசூரு திமுக சார்பில் தமிழ்நாடு முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் எழுபதாவது பிற‌ந்த நாளை பொதுக்குழு உறுப்பினர் எஸ்.பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் சிறப்பாக கொண்

முந்தைய கட்டுரைகேரளா முன்னணி திருமண தலமாக‌ மாற உள்ளது
அடுத்த கட்டுரைதங்கள் முதல் ஆண்டு நாளான ‘ஆரம்ப்’ மூலம் பகவான் கிருஷ்ணரின் வாழ்க்கையை நடன நாடகத்தின் மூலம் காட்சிப் படுத்திய ஜே.பி.நகர் நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்கள்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்