முகப்பு Politics கட்சி வாய்ப்பு வழங்கினால் ராஜாஜிநகர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தயார்: முன்னாள் துணை மேயர் பி.எஸ்.புட்டராஜு

கட்சி வாய்ப்பு வழங்கினால் ராஜாஜிநகர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தயார்: முன்னாள் துணை மேயர் பி.எஸ்.புட்டராஜு

0

பெங்களூரு, டிச. 15: கட்சி வாய்ப்பு வழங்கினால் ராஜாஜிநகர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தயார் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் துணை மேயர் பி.எஸ்.புட்டராஜு தெரிவித்தார்.

பெங்களூரு ராஜாஜிநகர் சட்டப்பேரவைத் தொகுதி பசவேஸ்வர்நகர் கே.எச்.பி காலனி 6 வது முக்கியச்சாலையில் 130/4 எண் கொண்ட கட்டடத்தில் தனது கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். அலுவலக திறப்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பி.கே.ஹரிபிரசாத், பெங்களூரு காந்திநகர் தொகுதியின் எம்.எல்.ஏவும், தமிழகம், கோவா, புதுசேரி மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளருமான தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அலுவலக திறப்பு விழாவிற்கு பிறகு பி.எஸ்.புட்டராஜ் செய்தியாளர்களிடம் கூறியது: ராஜாஜிநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு முன்னாள் மேயர் பத்மாவதி, மஞ்சுளா நாயுடு ஆகியோர் தோல்வி அடைந்துள்ளனர். காங்கிரஸ் கட்சி எனக்கு வாய்ப்பளித்தால், ராஜாஜிநகர் தொகுதியில் போட்டியிட தயாராக உள்ளேன்.

காங்கிரஸ் கட்சி சார்பில் பெங்களூரு மாநகராட்சி துணை மேயர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ள நான், கட்சியின் விசுவாசமிக்க தொண்டனாக தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். எனக்கு இந்த தொகுதியில் தொண்டர்களின் ஆதரவு அதிக அளவில் உள்ளது. எனவே வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சி கட்டளைக்கு கட்டுப்பட்டு பணியாற்றுவேன். கட்சியின் வளர்ச்சிக்காக காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் டி.கே.சிவகுமார், எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, முன்னாள் அமைச்சர் எம்.பி.பாட்டீல் ஆகியோர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் என்றார்.

முந்தைய கட்டுரைகர்நாடக மாநில திமுக இளைஞரணியில் உறுப்பினர்கள் சேர்ப்பு
அடுத்த கட்டுரைகிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சித்ரகலா பரிஷத்தில் கைவினைப்பொருட்கள் விற்பனையை நடிகை காருண்யா ராம் தொடக்கி வைத்தார்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்