முகப்பு Politics ஆக. 6 இல் கலைஞர் நூற்றாண்டு விழா தொடர் நிகழ்ச்சி

ஆக. 6 இல் கலைஞர் நூற்றாண்டு விழா தொடர் நிகழ்ச்சி

0

பெங்களூரு, ஆக. 1: மாநில திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா தொடர் நிகழ்ச்சி மற்றும் மாநில திமுக கலைஞரகம் புதிய பெயர் பலகை திறப்பு விழா ஆகியவை ஆக. 6 ஆம் தேதி பெங்களூரில் நடைபெற உள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநில அமைப்பாளர் ந.இராம‌சாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, பெங்களூரு ராமசந்திரபுரத்தில் உள்ள மாநில திமுக கலைஞரக வளாகம், மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கில் காலை 9 மணியளவில் க‌லைஞர் நூற்றாண்டு விழா தொடர் நிகழ்ச்சி மற்றும் மாநில திமுக கலைஞரகம் புதிய பெயர் பலகை திறப்பு விழா ஆகியவை ஆக. 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதில் கர்நாடக குடும்ப சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ்குண்டுராவ் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கு திமுக மாநில அமைப்பாளர் ந.இராமசாமி தலைமை வகிக்கிறார். கட்சிக் கொடியை ஏற்றுபவர் மாநில பொருளாளர் கே.தட்சிணாமூர்த்தி, அண்ணா கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவிப்பவர் மாநில அவைத் தலைவர் மொ.பெரியசாமி, வரவேற்புரையை இலைஞர் அணி துணை அமைப்பாளர் மு.இராஜசேகர், நன்றியுரை ஜி.இராமலிங்கம் நிகழ்த்துகின்றன‌ர்.

முன்னிலையை பொதுக்குழு சிக்பேட் எம்.ராமன், இரா.அன்பழகன், கே.சிகாமணி,மைசூரு எஸ்.பிரான்சீஸ், பத்ராவதி எஸ்.சிவலிங்கம், திருமதி முருகமணி, இலைஞர் அணியைச் சேர்ந்த‌ ந.சிவமலை, எம்.முருகாநத்தம், விகாஸ், முகம‌துஅலி ஆரிஃப், விக்ரம், லியோ, தினேஷ் யோகேந்திரா, சதீஷ் இலக்கிய அணியைச் சேர்ந்த எம்.ஆர்.பழம்நீ, வெள்.செல்வகுமார், பாவலர் ப.மூர்த்தி. சி.கண்ணன், பாவலர் முத்துசாமி, மகளிர் அணியைச் சேர்ந்த‌ அம்மாயி ஜெயவேல் சற்குணம், மங்கம்மாள், பி.காய‌த்திரி, மணிமேகலை, ராஜேஸ்வரி, லாவண்யா,

தொ.மு.ச. பேரவைவையைச் சேர்ந்த‌ மு.பொன்னம்பலம், கா.நாராயணசாமி, சி.ஜெயபால், தா.திருமலை, து.பிரபு, ஜி.குமார், காஞ்சி சிவசங்கர், கிளை கழக நிர்வாகிகள் து.பன்னீர்செல்வம், சகாயபுர‌ம் குப்புசாமி, ஜெ.தமிழ்செல்வன், கமலக்கண்ணன், எ.தங்கராஜ், உட்லேண்ட்ஸ் கணேசன், எ.இராஜேந்தி உந்தரகுமார், ஆ.கரிகாலன், தியாகராஜ‌ன், மு.தாமோதரன், எஸ்.ஏழுமலை முனியன், பெம்மல் கேசவன், மடிவாளா செல்வம், அலசூர் பல‌ராமன், மு.துரை, ஜி.நாகராஜ், குப்புராமி, கருணாநிதி, கோகநாத‌ன், பக்தவச்சலம், ம.சம்பத், இளவரசன், மார்கெட் மனோகரன் ஆகியோர் வகிக்கின்றனர்.

வாழ்த்துரை இரா.நாம்தேவ், வி.எஸ்.மணி, கே.எஸ்.சுந்தரேசன், ஏ.டி.ஆனந்தராஜ், முருகு தருமலிங்கம், போர்முரசு கதிரவன். ஆற்காடு அன்பழகன் வழங்குகின்றனர். நிகழ்ச்சிக்கு கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள்,பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

முந்தைய கட்டுரைபெங்களூரில் செப். 25 முதல் 5வது உலக காபி மாநாடு 2023 தொடக்கம்
அடுத்த கட்டுரைமிலன் மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து உலக தாய்ப்பால் வார விழா

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்