முகப்பு Bengaluru ஆக. 6 இல் அகில பாரத பவசார க்ஷத்ரிய மகாசபை

ஆக. 6 இல் அகில பாரத பவசார க்ஷத்ரிய மகாசபை

0

பெங்களூரு, ஆக. 4: பெங்களூரு, வசந்த்நகர், பி.ஆர்.அம்பேத்கர் பவனில் ஆக. 6‍ ஆம் தேதி அகில பாரத பவசார க்ஷத்ரிய மகாசபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, அமைச்சர் தினேஷ்குண்டுராவ் கலந்து கொள்கின்றனர்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா, பாவசர க்ஷத்ரிய தலைவர்கள் மற்றும் கர்நாடக மாநில செயற்குழுக் கூட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதில் மாநில அமைச்சர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நிறுவப்பட்ட அகில இந்திய பாவசர க்ஷத்ரிய மகாசபை, பாவசர க்ஷத்ரிய தலைவர்கள் மாநாடு மற்றும் மாநில செயற்குழுக் கூட்டம் ஆக. 6 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)காலை 10 மணிக்கு பெங்களூரு, வசந்த் நகர், மில்லர்ஸ் சாலையில் உள்ள பி.ஆர்.அம்பேத்கர் பவனில் தொடங்கி நடைபெற உள்ளது.

பவ்சார க்ஷத்ரியர்களின் தேசியத் தலைவர்களைத் தவிர, கர்நாடக மாநிலத்தின் அனைத்து ஒன்றியம், தாலுகாக்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து பாவசர க்ஷத்ரியத் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். கர்நாடக மாநிலத்தில் இந்த சமுதாயத்தினர் சுமார் 24 லட்சம் பேர் உள்ளனர். மாநாட்டில் 2,000 தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தின் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் வகை 2(A) பட்டியலில் பாவசரா க்ஷத்ரிய சமுதாயம் உள்ளது.

முந்தைய கட்டுரைஹேர்லைன் இன்டர்நேஷனல் ஹேர் அண்ட் ஸ்கின் கிளினிக் இந்தியாவின் முதல் லைஸ் (LICE) கிளினிக் அறிமுகம்
அடுத்த கட்டுரைஇந்தியாவின் முதல் தி கிரேட் இந்தியன் வெட்டிங் ரேஸ் 1

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்