முகப்பு Food ஃப்ரஷியஸ் ஃபுட்டெக் பிரைவெட் லிமிடெடின் 2 வது கிளை திறப்பு

ஃப்ரஷியஸ் ஃபுட்டெக் பிரைவெட் லிமிடெடின் 2 வது கிளை திறப்பு

0

பெங்களூரு, ஏப். 19: ஃப்ரஷியஸ் ஃபுட்டெக் பிரைவெட் லிமிடெடின் 2 வது கிளை எலக்ட்ரானிக்சிட்டி 2 வது பேஸ், கோவிந்த்ஷெட்டி பாளையத்தில் திறக்கப்பட்டது.

பெங்களூரு எலக்ட்ரானிக்சிட்டி 2 வது பேஸ் கோவிந்த்ஷெட்டிபாளையத்தில் ஃப்ரஷியஸ் ஃபுட்டெக் பிரைவெட் லிமிடெடின் 2 வது கிளையான‌ ‘ஃப்ரஷியஸ்’ வெள்ளிக்கிழமை (ஏப். 14) திறக்கப்பட்டது. திறப்பு விழாவில் ஏராளமான பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். அதில் கர்நாடகத்தின் நாட்டுப்புறக் கலையான டொல்லு குனிதா இடம்பெற்றிருந்தது அனைவரையும் கவர்ந்தது.

திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர், அதன் நிறுவனரும், மூத்த செயல் அதிகாரியுமான ஜெ.முகமது ஆரிப் செய்தியாளர்களிடம் கூறியது: பெங்களூரு எலக்ட்ரானிக்சிட்டி 2 வது பேஸ் கோவிந்த்ஷெட்டிபாளையத்தில் ஃப்ரஷியஸ் ஃபுட்டெக் பிரைவெட் லிமிடெடின் 2 வது கிளை ஃப்ரஷியஸ் தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. விரைவில் பெங்களூரு உள்ளிட்ட கர்நாடக மாநிலத்தில் 30 கிளைகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

எங்களின் ஃப்ரஷியஸ் விற்பனை மையத்தில் கடல் மற்றும் ஆற்றில் பிடிக்கப்படும் பல்வேறு வகையான மீன்கள், எறா, நண்டு உள்ளிட்டவைகளும், இயற்கையான முறையில் வளர்க்கப்படும், குறிப்பாக ஊசி செலுத்தாத, பக்க விளைவுகள் இல்லாத கோழி, ஆடு அகியவற்றின் இறைச்சி ( Tender chicken, Goat ) ஃபிரஷ்ஷாக விற்பனை செய்யப்படும். எங்களின் விற்பனை மையத்தின் நோக்கம் வாடிக்கையாளர்களிக்கு புத்தம் புதிதான மீன், எறா, நண்டு, கோழி இறைச்சி, வெள்ளாட்டு இறைச்சி ஆகியவற்றை வழங்குவதாகும்.

பெங்களூரைத் தொடர்ந்து, மாநிலத்தின் 2 ஆம் கட்ட நகரங்களிலும் ஃப்ரஷியஸ் விற்பனை கிளைகளை அடுத்த கட்டங்களாக தொடர்ந்து தொடங்க முடிவு செய்துள்ளோம். எங்களின் விற்பனை மையங்களுக்கு கர்நாடக, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மாநிலங்களில் கடல், ஆறுகளில் பிடிக்கப்படும் முதல்,, உயர் ரக மீன், எறா, நண்டு விற்பனை செய்யப்படுவதால், வாடிக்கையாளர்களிடமிருந்து அமோக ஆதரவு கிடைத்து வருகிறது என்றார்.

நிகழ்ச்சியில் கோனப்பன அக்ரஹாரா பாஜக இளைஞரணி தலைவரும், கிராம பஞ்சாயத்து நிர்வாகியுமான‌ சந்திரசேகர்ரெட்டி ( CSR ), சமூக சேவகர் சுரேஷ் நாகராஜ், ஃப்ரஷியஸின் இணை நிறுவனரும், மூத்த சந்தைப்படுத்துதல் அதிகாரியுமான‌ டி.அனூஜ் ராகவன், இணை நிறுவனரும், இயக்குநருமான வி.காசிநாதன், இணை நிறுவனரும், இயக்குநருமான சபரிநாத் ஜோதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முந்தைய கட்டுரைமதர்ஹுட் மருத்துவமனையில் முதன் முதலில் இந்தியா முழுவதும் மெய்நிகர் பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவு நெட்வொர்க் அறிமுகம்
அடுத்த கட்டுரைவிப்ரோ கன்ஸ்யூமர் கேர் மற்றும் லைட்டிங், பிராமிண்ஸை கையகப்படுத்துதலுடன் உணவுகளில் அதன் இருப்பை உறுதிப்படுத்துகிறது

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்