பெங்களூரு, டிச. 13: திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவதை கர்நாடக மாநிலத் திமுக வரவேற்றுள்ளது.
இது குறித்து மாநில அமைப்பாளர் ந.இராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: திராவிட பாரம்பரியத்தின் வழித்தோன்றல் தமிழின தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பேரன், தமிழக முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் புதல்வர், இளைஞர்களின் எழுச்சி நாயகன் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் பதவி வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனை கர்நாடக திமுக மனதார வரவேற்கிறது.
இதற்காக திமுக தலைமைக்கு நன்றி கூறுகிறோம். இளைஞர் உதயநிதி ஸ்டாலின் தனது அமைச்சர் பொறுப்பு மூலம் மக்கள் பணியாற்றுவதில் புதிய வரலாறு படைப்பார் என்பதில் சந்தேகமில்லை என்று ந.இராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.