Bangalore Dinamani

வெற்றி நடிக்கும் பகலறியான் தமிழ்த் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்: தமிழ் ஆர்வலர் முனைவர் எஸ்.டி.குமார்

பெங்களூரு, மே 23: வெற்றி நடிக்கும் பகலறியான் தமிழ்த் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்று தமிழ் ஆர்வலர் முனைவர் எஸ்.டி.குமார் தெரிவித்தார்.

பெங்களூரில் வியாழக்கிழமை பகலறியான் தமிழ்த் திரைப்படத்தின் முதல் விளம்பர பட போஸ்டரை வெளியிட்டு அவர் பேசியது: உலகமெலாம் தமிழ் வளர வேண்டும். தமிழர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெற வேண்டும். அந்த வகையில் நடிகர் வெற்றி நடிக்கும் 7 வது படம் பகலறியான். அவரின் 7 வது படம் தமிழ் திரைப்பட உலகில் வளர்ந்து உயரத்திற்கு செல்ல வேண்டும். இந்த திரைப்படத்தை முருகன் இயக்கி உள்ளார். லதா முருகன் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் நாளை (மே 24) உலகமெலாம் திரையிடப்படுகிறது. தமிழர்கள் பங்காற்றி உள்ள இந்த திரைப்படம் பெரும் வெற்றி பெற வாழ்த்துகள்.

இந்த திரைப்படத்தை பெங்களூரில் தமிழின் மீது பற்று கொண்ட திரு. செந்தில் அவர்கள் வெளியிடுகிறார். அவர் மெம்மேலும் உயர வாழ்த்துகள், பாராட்டுகள். அவர் தொடர்ந்து தமிழ்த் திரைப்படங்களை வெளியிட பேருதவியாக இருக்கிறார். அவர் தொடர்ந்து மேலும் பல தமிழ் திரைப்படங்களை பெங்களூரில் வெளியிட்டு நல்ல நிலை அடைய வேண்டும். இப்பணியில் சிறக்க வேண்டும் என்று வேண்டி, விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன் என்றார். நிகழ்வில் செந்தில், ராஜசேகரன், குப்பன், பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version