Bangalore Dinamani

ராஜாஜிநகர் பாஜக வேட்பாளர் எஸ்.சுரேஷ்குமார், அக்கட்சி தொண்டர்களுடன் பேரணியாக சென்று வேட்பு மனு தாக்கல்

பெங்களூரு, ஏப். 19: மாநில சட்டப்பேர‌வைத் தேர்தலில் ராஜாஜிநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான எஸ்.சுரேஷ்குமார் வேட்புமனு தாக்கல் செய்தார்.

பெங்களூரு ராஜாஜிநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான எஸ்.சுரேஷ்குமார் ராம்மந்தீர் கோயிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை செய்த பின்னர், நடிகர் டாக்டர் ராஜ்குமாரின் சிலைக்கு மாலை அணிவித்து, ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்களுடன் ராஜாஜிநகர் ஆர்டிஓ அலுவலகத்திற்கு பேரணியாக சென்று மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதில் பாஜக மக்களவை உறுப்பினர் பி.சி.மோகன், ராஜாஜிநகர் பொறுப்பாளர் வாசு, சாவித்திரி சுரேஷ்குமார், முன்னாள் துணை மேயர் ரங்கண்ணா, முன்னாள் மாநகராட்சி உறுப்பினர்கள் முனிராஜூ, ராஜண்ணா, எச்.ஆர்.கிருஷ்ணப்பா, ரவீந்திரன், தீபா நாகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எஸ்.சுரேஷ் குமார் சிறுவயதிலிருந்தே ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் தொடர்புடையவர். 1977 அவசரநிலையின் போது சிறைக்கு சென்றவர். மற்றும் தேசிய அளவிலான தலைவர்களுடன் தொடர்புடையவர்.

பெங்களூரு பல்கலைக்கழகத்தில் அறிவியலில் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து சட்டம் மற்றும் வழக்கறிஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பெங்களூரு நகர இளைஞர் பாஜக யுவ மோர்ச்சா தலைவராக பணியாற்றினார்.

1983 மற்றும் 1990 இல் பெங்களூரு பெருநகர மாநகராட்சியின் உறுப்பினராக பணியாற்றினார். 1994, 1999, 2008, 2013, 2018 என ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டம், நாடாளுமன்ற விவகாரங்கள், நீர் வாரியம், தொழிலாளர், கல்வி அமைச்சராகப் பணியாற்றினார்.

2023 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், ராஜாஜிநகர் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து 6 வது முறையாக பாஜக கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார். நிகழ்வில் மண்டல தலைவர் ராகவேந்திர ராவ் பாஜக தலைவர்கள் பிஎன் ஸ்ரீனிவாஸ், யஷாஸ் நாயக், சதீஷ் பகவான் , பாரத் காந்தி, வேலு, புட்சா, ஆதர்ஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

Exit mobile version