Bangalore Dinamani

மே 12ல் கர்நாடக தமிழர்கள் ஒற்றுமை குறித்த ஆலோசனை கூட்டம்

File Photo

பெங்களூரு, மே 7: பெங்களூரு அல்சூர் யாதவா சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 12) கர்நாடக தமிழர்கள் ஒற்றுமை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழர்கள் அனைவரும் ஜாதி, மத வேறுபாடு இல்லாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தமிழ் ஆர்வலர் எஸ்.டி.குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: சிங்கப்பூர், மலேசியா தமிழர்கள் போல, கர்நாடக மாநில தமிழர்கள் இந்த மண் சார்ந்து, கன்னடர் தமிழர் ஒற்றுமைக்கு வலு சேர்க்கவும், கர்நாடக தமிழர்கள் ஒற்றுமைக்கு பலம் சேர்க்கவும். முன்னெடுக்கும் முயற்சிக்கு ஜாதி, மத, கட்சி வேறுபாடுகள் இல்லாமல், தமிழர்கள் என்ற உணர்வுடன், கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் ஒற்றுமையை ஒன்று சேர்ந்து, வென்று எடுப்போம் என்று தொடர்ந்து என்னிடம் கலந்துரையாடி வரும் பல்வேறு கட்சியினர், தமிழ் அமைப்புகள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட‌ அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

வரும் மே 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பெங்களூர் அல்சூர் ஏரிக்கரை அருகில் உள்ள யாதவா சங்கத்தில் நடைபெறும் கர்நாடக தமிழர்கள் ஒற்றுமை குறித்து நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கட்சி வேறுபாடுயின்றி, ஜாதி மத வேறுபாடு இல்லாமல் திரளாக கலந்து கொண்டு கர்நாடக மாநில தமிழர்கள் வளம் பெற எந்த வகையில் முன்னெடுத்து செல்வது என்ற தங்களது கருத்துக்களை பதிவு செய்ய உங்களில் ஒருவனாக இருந்து கேட்டு கொள்கிறேன் என அதில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version