Bangalore Dinamani

முன்னாள் எம்.எல்.ஏ சூர்யநாராயண ரெட்டியின் ஆதரவாளர்கள் கொலைமிரட்டல்- தகுந்த பாதுகாப்பு வழங்குமாறு அருணா ரெட்டி குடும்பத்தினர் வேண்டுகோள்

பெங்களூரு மார்ச் 13: முன்னாள் எம்எல்ஏ என் சூர்யநாராயண ரெட்டி, என். பாரத் ரெட்டி, என் சரத் ரெட்டி மற்றும் அவர்களது குடும்பத்தினர் எங்களின் சொத்தை போலி ஆவணங்கள் மற்றும் மோசடி மூலம் அபகரித்துள்ளனர். இது குறித்து எங்கள் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் எங்கள் குடும்பத்திற்கு உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்து தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளதாக மறைந்த என்.தேவா ரெட்டியின் மகள்கள் என்.பூர்ணிமா, அருணா ரெட்டி, சி.சுனில் குமார், என்.கவிதா, என்.சாரதா பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளர் சந்திப்பு நடத்தி ஆவணங்களை வெளியிட்டார்.

அவர்களது வழக்கறிஞர் ஆர்.பாண்டு, டி ஹனுமாரெட்டி மற்றும் நீரஜ் ராஜீவ் சிவம் ஆகியோருடன் இணைந்து ஆவணங்களை வெளியிட்டார். 2019 இல் சர்யநாராயண ரெட்டியின் அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியபோது, ​​சோதனையின் போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், சூர்யநாராயண ரெட்டியின் உறவினர் மற்றும் என்.தேவி ரெட்டியின் கடைசி மருமகன் சி.சுனிலுக்கு நோட்டீஸ் அனுப்பியது, ​​இந்த பார்ட்னர்ஷிப் மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. ஆவணங்களை சோதனை செய்ததில் மோசடி முழுவதுமாக வெளிச்சத்துக்கு வந்தது.

என். அருணா ரெட்டி கூறுகையில், “நான் பெல்லாரியில் வசிப்பவள். அரசியல்வாதியும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சூர்யநாராயண ரெட்டியுடன் இணைந்து எனது தந்தை ராகவேந்திரா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை நடத்தி வந்தார். எங்கள் தந்தை அகால மரணமடைந்தார். பங்குதாரராக இருந்த எங்கள் தந்தைக்கு எவ்வளவு பணம் மற்றும் நிலம் உள்ளது என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் வருமான வரித்துறைக்கு எங்களது சொத்து விவரம் தெரியும். எங்கள் தந்தைக்கு சொந்தமான சொத்து ஆவணங்களை போலியாக தயாரித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். நியாயம் கேட்க‌ச் சென்றால் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எங்களுக்கு காவல் துறையினர் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

அப்போது, என் பூர்ணிமா, அருணா ரெட்டி, சி சுனில் குமார், என் கவிதா மற்றும் என். சாரதா, வழக்கறிஞர் ஆர். பாண்டு, டி ஹனுமாரெட்டி மற்றும் நீரஜ் ராஜீவ் சிவம் ஆகியோர் பதிவுகளை வெளியிட்டனர்.

Exit mobile version