Bangalore Dinamani

மதியழகன் எம்எல்ஏ மகள் திருமண வரவேற்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஸ்வநாதன், கவிப்பிரியா அசோக்குமார் பங்கேற்பு

பெங்களூரு, நவ. 6: பெங்களூரில் அக்.31 ஆம் தேதி மாலை நடைபெற்ற திருமண வரவேற்பில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான விஸ்வநாதன் பழனியப்பன் மற்றும் டிகேஎன் நந்தகுமாரின் மகளுமான கவிப்பிரியா அசோக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று, மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பெங்களூரு அரண்மனை மைதானத்தில் உள்ள சாமராஜா வஜ்ரா மானிக்யாவில் அக்.31 ஆம் தேதி மாலை கிருஷ்ணகிரி மாவட்டத்தின் திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான மதியழகன், விஜயா தம்பதியின் மகள் ஷிவாணிக்கும், பெங்களூரு சிவகுமார், மஞ்சுளா தம்பதியின் மகன் கௌதமின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தொழிலாளர் பிரிவின் துணைத் தலைவர் விஸ்வநாதன் பழனியப்பன், தமிழ்நாட்டின் சமதா கட்சியின் முன்னாள் தலைவர் நந்தனம் டிகேஎன் நந்தகுமாரின் மகள் கவிப்பிரியா அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். வரவேற்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் திமுக‌, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Exit mobile version