Bangalore Dinamani

“பேப்பர் இன், மணி அவுட்” புத்தகம் வெளியீடு

பெங்களூரு, ஆக. 27: பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ஐயர் மற்றும் ஜெகதீஷ் ஷெட்டி”பேப்பர் இன், மணி அவுட்” புத்தகத்தை டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டார்.

பின்னர் பேசிய டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி, ஊழலில் நாம் விழிப்புடன் இருப்பது மிகவும் அவசியம். ஐநா உதவியுடன் வெளிநாடுகளில் பதுக்கி உள்ள கறுப்புப் பணத்தை திரும்பப் பெற பல வழிகள் உள்ளன. இந்தியா பொருளாதாரத்தில் சிறந்து விளங்க,வரிகளை நீக்கினாலேயே போதும். வரி செலுத்தாமல் உள்ள பலர் தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை கொண்டு, சொகுசு பொருள்களை வாங்கின்றனர். தங்களின் வீடுகளை அலங்கரிக்கின்றனர். ஒரு சிலர் துபாயில் உள்ள இடைத்தரகர்கள் மூலம் கள்ளப்பணத்தை டாலர்களாக மாற்றி, வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளனர் என்றார்.

பி குருஸ் போர்ட்டலின் ஸ்ரீ ஐயர் மற்றும் மும்பையில் உள்ள விராட் ஹிந்துஸ்தான் சங்கத்தின் ஜகதீஷ் ஷெட்டி ஆகியோரால் எழுதப்பட்ட புக் ஆஃப் ஃபிக்ஷன். அரசியல் வாதிகளின் ஊழல் நிறைந்த வாழ்க்கை முறை பற்றியும், அவர்கள் தங்கள் சுயநலத்துக்காக அந்த அமைப்பை எப்படி சீர்குலைக்கிறார்கள் என்பது குறித்து புத்தகம் பேசுகிறது.

ஸ்ரீஐயர் தனது உரையில், ஊழல் அரசியல்வாதிகள் இந்த அமைப்பை கையாண்டதாகவும், இதனால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த புத்தகம் இந்த புத்தகத்தை எழுதியதாக தெரிவித்தார்.

மற்றொரு எழுத்தாளர் ஜகதீஷ் ஷெட்டி கூறுகையில், புனைகதை என்றாலும், அதிகாரத்தில் யார் இருந்தாலும், அந்த அமைப்பைப் பொருட்படுத்தாமல் ஊழல் அரசியல்வாதிகளின் வாழ்க்கை முறையைச் சுற்றியே இந்தப் புத்தகம் உள்ளது. ஊழல் என்பது சமூகத்தை அழிக்கும் புற்றுநோய் என்றார்.

புத்தகத்தின் விலை ரூ. 399 மற்றும் அமேசான் உள்ளிட்ட பிற ஆன்லைன் தளங்களிலும் கிடைக்கிறது. புத்தகத்தின் முதல் பிரதியை சண்டிகரில் இருந்து வழக்கறிஞர் மற்றும் எழுத்தாளர் டாக்டர் எம்.ஆர்.வெங்கடேஷ், வழக்கறிஞர் அஜய் ஜக்கா, கேரளாவைச் சேர்ந்த டி.ஜி.மோகன்தாஸ் மற்றும் கோயில் வழிபாட்டாளர் சங்கத்தின் டி.ஆர்.ரமேஷ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

விழாவில் கர்நாடக விராட் ஹிந்துஸ்தான் சங்கத்தின் தலைவர் நிகுஞ்ச் ஷா வரவேற்றார். புத்தக வெளியீட்டு விழா மிகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.விழாவில் திரளாக பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சனிக்கிழமை காலை முதல் ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை டாக்டர் சுவாமி தலைமையில் விராட் ஹிந்துஸ்தான் சங்கம் பெங்களூரில் 2 நாள் தேசிய சமூக ஊடகப் பயிலரங்கை ஏற்பாடு செய்திருந்தது. இதில் இந்தியா முழுவதிலும் இருந்து 75 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version