Bangalore Dinamani

பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் திருமண மேடை 151-வது நேர்காணல்

பெங்களூரு, பிப். 10: பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் திருமண மேடை 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. திருமண மேடை பிரிவில் தமிழினத்தை சார்ந்த அனைத்து பிரிவினரும் பதிவு செய்து பயனடைந்து வருகின்றனர். ஆதிதிராவிடர், முதலியார், பிள்ளை, கவுண்டர், வன்னியர், சத்திரியர், முக்குலத்தோர், விஸ்வகர்மா, செட்டியார், நாடார், யாதவர் உள்ளிட்ட பல பிரிவினர் அவர்களுடைய உட்பிரிவை சார்ந்தவர்களும் திருமண மேடை எனும் ஒரு குடையின் கீழ் ஒன்று சேர்ந்து பயனடைந்து வருவதுடன், பலர் கலப்புத் திருமணமும் செய்து வருகின்றனர்.

அவர்கள் மட்டுமல்லாமல் தமிழ் கத்தோலிக்கப் பிரிவினரும், தெலுங்கு பேசும் நாயுடு வகுப்பினரும், கணவனை இழந்த பெண்களும், மனைவியை இழந்த ஆண்களும், மணமுறிவு பெற்றவர்கள் நமது சங்கத் திருமண மேடை பிரிவில் பதிவு செய்துள்ளனர். பெங்களூரைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் கர்நாடகத்தின் பல பகுதிகளிலிருந்தும் தமிழ்நாடு, மும்பை, டெல்லி மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றும் ஏராளமானோர் நமது திருமண மேடையில் பதிவு செய்துள்ளனர். இதுவரை ஆயிரகணக்கான மணமேடை உறுப்பினர்களுக்கு திருமணமேடை வழியாகத் திருமணம் நடைபெற்றுள்ளது.

பதிவு செய்தோர் மேலும் பயன் பெறும் வகையில் 6 வாரங்களுக்கு ஒரு முறை சங்கத்தில் “நேர்காணல் நிகழ்ச்சி” நடத்தப்படுகிறது. அதே சமயம் பதிவு செய்த ஆண் மற்றும் பெண் மேடையில் அறிமுகம் செய்யபடுவர். இந்த மாதம் 151-வது நேர்காணல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை பிப்.11 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.

கர்நாடக மாநில முன்னணி தொழிலதிபரான தங்கம், அவரது துணைவியருடன் வந்து, திருவிளக்கேற்றி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைக்க உள்ளார்.

ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணி வரை பதிவு செய்யும் அனைவரையும் அன்று அறிமுகப்படுத்தப்படும். மேலும் விவரம் வேண்டுவோர் சங்க தொலைபேசி எண் 25510062 தொடர்பு கொள்ளவும். மேற்கண்ட செய்தியை சங்கத் தலைவர் கோ.தாமோதரன் செயலாளர் மு.சம்பத் திருமணமேடை பொறுப்பாளர்கள் அமுதபாண்டியன், சரவணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version