Bangalore Dinamani

பெங்களூரு அல்சூரில் திருவள்ளுவர் ஜெயந்தி விழா நாளை கொண்டாட்டம்

பெங்களூரு, ஜன. 14: பெங்களூரில் நாளை காலை 9 மணி அளவில் நடைபெறும் திருவள்ளூவர் ஜெயந்தி விழாவில் எதிர்க்கட்சி சித்தராமையா, காங்கிரஸ் தலைவர்கள் பி.கே. ஹரிபிரசாத், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் மத்திய‌ அமைச்சர் கே.எச்.முனியப்பா உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

இது தொடர்பாக விழா குழு அமைப்பாளர் பையப்பனஹள்ளி ரமேஷ் கூறியதாவது: திருவள்ளூவர் தின விழாவை முன்னிட்டு நாளை காலை 9 மணி அளவில் அல்சூரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மேலவை எதிர்க் கட்சிதலைவர் பி.கே.ஹரிபிரசாத் , காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமார், மாநில செயல் தலைவர் ராமலிங்கரெட்டி, பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் கோ.தாமோதரன் மற்றும் நிர்வாகிகள், முன்னாள் மத்திய அமைச்சர் கே.எச்.முனியப்பா மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கலந்து கொள்கின்றனர்.

தமிழர் தினமான பொங்கல் விழாவில் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் தமிழர்களின் பலத்தை காட்ட வேண்டும். தமிழர்கள் ஒன்றிணைய மாட்டார்கள் என்ற மாயை உடைக்க வேண்டும் என்று விழாக்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

Exit mobile version