Bangalore Dinamani

பெங்களூரில் இன்று உலகத் தமிழ் நாள் (பாரதிதாசன் பிறந்தநாள்) விழா

பெங்களூரு, ஏப். 29: பெங்களூரில் இன்று கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம்-பெங்களூரு, இலெமுரியா அறக்கட்டளை- மும்பை, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்- அமெரிக்கா, தமிழ் அறக்கட்டளை பெங்களூரு, பாரதிதாசன் மறுமலர்ச்சி மன்றம்- பெங்களூரு இணைந்து வழங்கும் உலகத் தமிழ்நாள் விழா நடைபெற உள்ளது.

கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்துமணி நன்னன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: உலகத் தமிழ் நாள், பாரதிதாசன் பிறந்தநாள் விழா திங்கள்கிழமை (ஏப். 29) மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பெங்களூரு குயின்ஸ் சாலை, இன்ஸ்டிடுயூஷன் ஆஃப் அக்ரிகல்சுரல் டெக்னாலிஸ்ட்ஸ், முதல் தளத்தில் (தினச்சுடர் எதிரில்), நடைபெற உள்ளது.

நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து டெய்சி ராணியும், வரவேற்புரை க.தினகரவேலுவும், நோக்கவுரை அ.தனஞ்செயன் (எ) வெற்றிச்செல்வனும் ஆற்ற உள்ளனர். தலைமை பேரா. முனை.கு.வணங்காமுடியும், முன்னிலை சி.தண்டபாணி, வி.வெங்கடேசன், ரெ.மு.இராசேந்திரன் வகிக்கின்றனர்.

‘பாரதிதாசன் ஆத்திச்சூடி’ சிறப்புப் பாவ‌ரங்கம் கவிஞர் கா.பாபுசசிதரன் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் பாவலர் கண்ணதாசதாசன் வையநூல் ஆய்வு செய் என்ற தலைப்பிலும், பாவலர் மா.கார்த்தியாயினி வெல்லத் தமிழ் பழகு என்ற தலைப்பிலும், பாவலர் குணவேந்தன் பெண்ணோடாண் நிகர் என்ற தலைப்பிலும், பாவலர். தேவி.இராஜேஷ் கைத்தொழில் பழகு என்ற தலைப்பிலும், பேரா. வி.சரளா ஆறுமுகம் தோற்பினும் முயற்சி செய் என்ற தலைப்பிலும், பாவலர் ஆ.வீ.மதியழகன் வையம் வாழ வாழ் என்ற தலைப்பிலும் கவிதை வாசிக்கின்றனர்.

வாழ்த்துரையை டாக்டர் தமிழ்ச்செல்வி, நா.காளிதாசம்மாள், அருள்தந்தை ஆரோக்கியநாதன் ஆகியோர் வழங்குகின்றனர். சிறப்புரை சு.குமணராசனும், நன்றியுரையை அ.செந்தில்நாதன், நெறியாள்கையை முனைவர் தி.சரசுவதி ஆற்றுகின்றனர்.

Exit mobile version