Bangalore Dinamani

செல்லப்பிராணிகளின் முழுமையான வளர்ப்பை ஊக்குவிக்கும் ஒரு இலவச நிகழ்வு

பெங்களூரு, ஜூலை 29: ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 30) செல்லப்பிராணிகளின் முழுமையான வளர்ப்பை ஊக்குவிக்கும் ஒரு இலவச நிகழ்வு நடைபெற உள்ளது.

பெங்களூரு, ஜக்கூரு, அக்ரஹாரா முக்கியச்சாலை, விதான சவுதா லேஅவுட், 5வது கிராஸ், வாக் வில்லேவில் ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை, செல்லப்பிராணிகளுக்கும் அவற்றின் உரிமையாளர்களுக்கும் இடையிலான பிணைப்பின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் முதன்மையான வாக் வில்லேவுடன், பெங்களூரில் செல்லப்பிராணிகளின் முழுமையான வளர்ப்பை ஊக்குவிக்கும் ஒரு இலவச நிகழ்வு நடைபெற உள்ளது.

வாக்-வில்லின் நிறுவனர் மற்றும் உரிமையாளர் சுபத்ரா செருகுரி, செல்லப்பிராணி பராமரிப்பு மற்றும் நடத்தை சிக்கல்கள் குறித்து செல்லப் உரிமையாளர்களுடன் ‘கேனைன் ஓபன் ஹவுஸ்’ நடத்துகிறார். செல்லப் பிராணிகளுடன் எதிர்கொள்ளும் சவால்களை குறித்து உரிமையாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பார். இதில் செல்லப்பிராணிகளை வளர்க்கும் உரிமையாளர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Exit mobile version