Bangalore Dinamani

கர்நாடக மாநில திமுக இளைஞரணியில் உறுப்பினர்கள் சேர்ப்பு

பெங்களூரு, டிச . 14: கர்நாடக மாநில திமுக இளைஞரணியில் புதிய உறுப்பினர்களை சேர்க்க விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படுகிறது

இது குறித்து கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந. இராமசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: திமுக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அறிவிப்புக்கு இணங்க கர்நாடக மாநிலத்தில் திமுக இளைஞரணி புதிய உறுப்பினர்கள் சேர்க்க விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படுகிறது. இந்த விண்ணப்பங்கள் பெங்களூரு ஸ்ரீராமபுரம் ராமச்சந்திரபுரத்தில் உள்ள திமுக மாநில தலைமை அலுவலகத்தில்
இந்த வழங்கப்படுகிறது.

விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வரும் 25 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் விண்ணப்ப படிவங்களை வழங்க 25 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். கர்நாடக மாநில திமுக இளைஞர் அணியில் சேர விரும்பும் இளைஞர்கள் விண்ணப்ப உடனடியாக விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டு பூர்த்தி செய்து கொடுக்கலாம். ஏற்கனவே உள்ள இளைஞரணி உறுப்பினர்களும் தங்கள் உறுப்பினர் அட்டைகளை புதுப்பித்து கொள்ளலாம்.

40 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் இப்பொறுப்புகளுக்கு விண்ணப்பிக்கவும் . விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாக, முழுமையாக நிரப்பி, பாஸ்போர்ட் அளவு கலர் புகைப்படம் ஒட்டி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் வாக்காளர் அடையாள அட்டை, கல்விச் சான்றிதழின் நகல் இணைப்பது அவசியம். இதுவரை ஆற்றிய கழகப் பணிகள் குறித்த ஆவணங்கள் இருக்கும் பட்சத்தில் அவற்றின் நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பலாம் தாமதமாக வரும் விண்ணப்பம் எக்காரணத்தை முன்னிட்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

Exit mobile version