Bangalore Dinamani

கர்நாடகத்தில் திரளாக வந்து அஇஅதிமுக உறுப்பினர் விண்ணப்ப படிவங்கள் பெற்றுச் சென்ற‌ அதிமுகவினர்

பெங்களூரு, ஏப். 10: மாற்று கட்சியில் இருந்து கட்சியில் இணைந்தவர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் திரளாக வந்து அஇஅதிமுக உறுப்பினர் விண்ணப்ப படிவங்கள் பெற்றுச் சென்றன‌ர்.

சென்னை அஇஅதிமுக தலைமை கழகத்தில் உறுப்பினர் விண்ணப்ப படிவங்கள் வினியோகத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கடந்த ஏப்.5 ந்தேதி தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக கர்நாடக மாநில அஇஅதிமுக வினர் உறுப்பினர் விண்ணப்ப படிவங்களை கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வழங்கி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து ஞாயிறுக்கிழமை (ஏப். 9) பெங்களூரு காமராஜர் ரோடு சிவன்செட்டி கார்டனில் உள்ள கட்சி அலுவலகத்தில் கர்நாடக மாநில அஇஅதிமுக செயலாளர் முனைவர் எஸ்.டி.குமார் அவர்கள் அஇஅதிமுக உறுப்பினர் விண்ணப்ப படிவங்களை கர்நாடக மாநில அஇஅதிமுக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் வழங்கினார். உறுப்பினர் விண்ணப்ப படிவங்களை மாற்று கட்சியில் இருந்து அஇஅதிமுகவில் இணைந்தவர்கள் உள்ளிட்ட அக்கட்சியினர் திரளாக‌ வந்து பெற்றுச் சென்றனர்.

நிகழ்வில் மாநில அவைத்தலைவர் அன்பரசன், மாநில பொருளாளர் வேடியப்பன், மாநில இணைச் செயலாளர் சந்திரிகா, மாநில துணைச்செயலாளர் மல்லிகா, பொதுக்குழு உறுப்பினர்கள் கோவிந்தசாமி, சத்தியா உட்பட மாவட்ட, தொகுதி, சார்பு அணி, வட்ட செயலாளர்கள், தொண்டர்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தனர்.

அமமுக விலிருந்து விலகி அக்கட்சியின் தலைமை பொதுக்குழு உறுப்பினர் சகாயபுரம் ரவி அவர்கள் கர்நாடக மாநில அஇஅதிமுக செயலாளர் முனைவர் எஸ்.டி.குமார் முன்னிலையில் அஇஅதிமுகவில் இணைந்தார். இது குறித்து கர்நாடக மாநில அஇஅதிமுக செயலாளர் முனைவர் எஸ்.டி.குமார் கூறுகையில், கர்நாடக மாநிலத்தில் இரண்டு லட்சம் உறுப்பினர் சேர்க்கையை இலக்காக வைத்துள்ளோம் என்றார்.

Exit mobile version