Bangalore Dinamani

எம்இஜி ராணுவப்பள்ளியில் படித்த மாணவர்கள் ஒற்றுமையை பாராட்ட வேண்டும்: பிரிகேடியர் சலபத்குப்தா

பெங்களூரு, ஜூன் 11: எம்இஜி ராணுவப்பள்ளியில் படித்த மாணவர்கள் ஒற்றுமையை பாராட்ட வேண்டும் என்று பிரிகேடியர் சலபத்குப்தா தெரிவித்தார்.

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை எம்இஜி ராணுவப்பள்ளியின் 100 வது ஆண்டு விழாவை அங்கு படித்த மாணவர்கள் சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு அவர் பேசியது: நானும் பள்ளியில் படித்து ராணுவத்தில் பணியாற்றி வருகிறேன். ஆனால் என்னுடன் பள்ளியில் படித்த எந்த மாணவர்களின் பெயரும் நினைவுக்கு வரவில்லை.

ஆனால் எம்இஜி பள்ளியில் படித்த இந்த மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியின் நூற்றாண்டு விழாவை இவ்வளவு சிறப்பாக கொண்டாடிய மாணவர்களின் ஒற்றுமையை பாராட்டியே ஆக வேண்டும். அதுதான் மெட்ராஸ் சாப்பர்ஸின் பெருமையாகும். 1923 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தப் பள்ளியில் பல மாணவர்கள் படித்து வெளியே சென்றுள்ளனர்.

அவர்களில் ஒரு சிலர் குழுவாக இணைந்து இந்த நூற்றாண்டு விழாவை நடத்தி வருவது பாராட்டுதலுக்குரியது. இது போன்ற விழா நடைபெறுவது அபூர்வம். இந்த விழாவில் நான் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். நிகழ்ச்சியில் ஜான் ஆண்ட்ரோ, ஜான் பீட்டர், வேலு பலராமன், கருணா, மோகன், இந்திரா உள்ளிட்ட எம்இஜி பள்ளியில் படித்த 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version