Bangalore Dinamani

இந்திய நாகரிகத்தின் வாழ்வுக்கான போராட்டத்தை விவரிக்கும் பிராமின் ஜெனோசைடு (பிராமண இனப்படுகொலை) புத்தகம் வெளியீடு

பெங்களூரு, ஆக. 17: ‘பிராமணர் இனப்படுகொலை – இந்து அழிவின் முன்னோடி’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா மல்லேஸ்வரம் எச் எச் யதுகிரி யதிராஜ மடத்தில் உள்ள ஸ்ரீ ராமானுஜ சமஸ்கிருதி பவனில் ஆகஸ்ட் 15 ஆம் தேதிய‌ன்று நடைபெற்றது. இந்த புத்தகத்தை திரு. மகாலிங்கம் பாலாஜி என்பவர் ‘அசி’ என்ற புனைப்பெயரில் எழுதியுள்ளார்.

பிராமண இனப்படுகொலை பாரதிய நாகரிகத்தின் உயிர்வாழ்விற்கான போராட்டத்தை விவரிக்கிறது. பாரதிய நாகரிகத்தையும் ஆதிகாலத்துடன் எஞ்சியிருக்கும் ஒரே இணைப்பு என்று கூறலாம். பாரம்பரிய அறிவு அமைப்புகளைப் பாதுகாப்பதில் அவர்களின் பங்கின் காரணமாக அறியாமலேயே இந்த நாகரிகப் போரின் முன்னணியில் ஈர்க்கப்பட்ட பிராமண சமூகம் எதிர்கொள்ளும் சவால்களை இந்த புத்தகம் தெரிவிக்கிறது.

மேல்கோட்டை யதுகிரி யதிராஜமடத்தின், எச் எச் ஸ்ரீ ஸ்ரீ யதுகிரி யதிராஜ நாராயண ராமானுஜ ஜீயர், உடுப்பி புத்திகே மடத்தின், எச் எச் ஸ்ரீ ஸ்ரீ சுகுணேந்திர தீர்த்த சுவாமிகள் ஆகியோரின் அருள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், குருஜிகள் அனுக்ரஹ ஆசீர்வாதத்துடன் ஆசிர்வதித்தனர். ஹரிஹரபுரம் ஸ்ரீ ஹரிஹரபுர மடத்தின் எச் எச் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வயம்பிரகாச சச்சிதானந்த‌ சரஸ்வதி சுவாமிகளின் அனுக்ரஹ சந்தேசமும் வாசிக்கப்பட்டது. புகழ்பெற்ற அறிஞர்கள் வேதவாரிதி டாக்டர் பி ராமானுஜன் மற்றும் வித்யாவாச்சஸ்பதி டாக்டர் ஆரலுமல்லிகே பார்த்தசாரதி ஆகியோர் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பார்வையாளர்களுக்கு எழுச்சியூட்டும் உரைகளை வழங்கினர்.

இந்த புத்தகம் அனைத்து இந்தியர்கள் மற்றும் பாரதிய நாகரிகத்தின் நலம் விரும்பிகளுக்கு, நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும், நிலையான, இணக்கமான மற்றும் சமமான நவீனத்துவத்திற்கான வழிகாட்டியாகவும் உள்ளது.

சென்னையில் இந்த‌ நூல் வெளியீட்டு விழா ஜூலை 6 ஆம் தேதி நடைபெற்றது. விழாவில், விராட் ஹிந்துஸ்தான் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, செந்தாலங்கார ஷண்பக மன்னார் ராமானுஜ ஜீயர் சுவாமிகள், மன்னார்குடி ஸ்ரீ ஸ்ரீ செண்டாலங்கார செண்பகமன்னார் ஜீயர் மடம், எழுத்தாளர் பாஸ்கரன் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Exit mobile version