Bangalore Dinamani

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 88வது நிறுவன தினக் கொண்டாட்டம்

பெங்களூரு, பிப். 11: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 88வது நிறுவன தினத்தை சனிக்கிழமை (பிப். 10) சிறப்பாக‌ கொண்டாடப்பட்டது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) பிப்ரவரி 10 ஆம் தேதி அதன் நிறுவனர் எம்.சிடி.எம். சிதம்பரம் செட்டியார் 1937 ஆம் ஆண்டு இந்நாளில் வங்கியை நிறுவினார். நிறுவனத்தையொட்டி முன்னணி மருத்துவமனைகள் மூலம் பல இடங்களில் இலவச உடல்நலம் மற்றும் கண் பரிசோதனைக்கு வங்கி ஏற்பாடு செய்தது.

பெங்களூரில் உள்ள மவுண்ட் கார்மல் கல்லூரியில் அதன் முதன்மை மண்டல மேலாளர் உமேஷ் குமார் சிங் மரக்கன்றுகளை நன்கொடையாக வழங்கினார். பின்தங்கிய மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் வங்கி சார்பில் காந்திநகர் தொழிலாளர் பெல்லோஷிப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிப் பைகளை வழங்கியது.

சாலை பாதுகாப்பு மற்றும் சைபர் விழிப்புணர்வு தொடர்பான சிஎஸ்ஆர் செயல்பாட்டின் ஒரு பகுதியாக, ” இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பெங்களூரு சிட்டி கிளை முதல் மெஜஸ்டிக் வரை” பொதுமக்களுக்கு சமூக விழிப்புணர்வை பரப்புவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட வாக்கத்தான் நிகழ்வை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மண்டல மேலாளர் கொடியசைத்து தொட‌க்கி வைத்தார்.

“வாடிக்கையாளர்கள் இதயங்களில் இடம் பிடித்தல் மற்றும் அவர்களின் புன்னகையைப் பரப்புவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தொடர்ந்து பாடு பட்டு வருகிறது”.

Exit mobile version